img
img

கைலாசநாதர் திருவருளால் புத்ர பாக்கியம் பெற்றோம்!
வெள்ளி 10 மார்ச் 2017 13:35:00

img

வரம் வேண்டி வருபவர்களுக்கு செல்வம் அனைத்தையும் வழங்குவது மட்டுமின்றி, நாடி வரும் பக்தர் உள்ளங்களில் சேவை உணர்வையும் விதைத்து செரண்டாவில் அருளையும் பொருளையும் செல்வ மழையாகப் பொழிந்து வருகிறார், ஸ்ரீ செல்வ விநாயகர். செரண்டாவில் 1950ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் அங்குள்ள இரயில்வே நிலையத்தில் பணியாற்றிய சிவகுரு மாஸ்டரால் இந்த ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அங்கு வேலை செய்த இர யில்வே ஊழியர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது. ஆலயம் அமைப்பதற்கான இடத்தை சிவகுரு மாஸ்டர் கனவில் செல்வ விநாயகரே வந்து சுட்டிக் காட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடக்கக் காலத்தில், சிறு மரக் கொட்டகையை அமைத்து அதில் செல்வ விநாயகரின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தது. அந்தச் சிறு கொட்டகையில் அருள்பாலித்து வந்த செல்வ விநாயகருக்கு சிவகுரு மாஸ்டரே தினந்தோறும் அகல்விளக்கு ஏற்றி வந்துள்ளார். 1965ஆம் ஆண்டில் செல்வ விநாயகருக்குச் சிறு ஆலயம் முறையாக அமைக்கப்பட்டது. அப்போதுதான் தமிழகத்திலிருந்து 3 அடி உயரத்தில் மூல வருக்கான திருவுருவச் சிலை கொண்டு வரப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பிறகு, 1968ஆம் ஆண்டில் ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. 2003இல் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆலயத்தை விரிவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் செவ்வனே நிறைவு பெற்ற பிறகு 2006ஆம் ஆண்டில் ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று ஏறக்குறைய 3/4 ஏக்கர் நிலப்பரப்பில் செல்வ விநாயகருக்கு அழகிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட செல்வ விநாயகரின் திருவுருவச் சிலை பின்னமடைந்த காரணத்தால் மூலவருக்கான புதிய திருவுருவச் சிலை 5 அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாசி மகத்தில் அலங்காரத் தேரில் செல்வ விநாயகர் முழுமுதற் தெய்வமான விநாயகர், இந்த ஆலயத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் என்னும் திருநாமத்தில் பக்தர்களுக்கு அருளாசியை வழங்கி வருகிறார். பக்தர் விக்னங்களை நீக்கி அவர்கள் வேண்டும் செல்வங்களை வழங்குவதால் அவருக்குச் செல்வ விநாயகர் என்ற திருநாமம் உண்டு. கருவறையில் இடதுகாலை மடக்கி வலதுகாலை தொங்கவிட்ட கம்பீரத் தோற்றத்தில் காட்சியளிக்கும் செல்வ விநாயகரின் திருமுகத்தில் உள்ள வசீ கரம், காண வரும் பக்தர் உள்ளங்களில் சாந்தத்தை ஏற்படுத்தி பரவச நிலைக்குக் கொண்டு செல்கிறது. குழலினிது யாழினிது மழலைச் சொல் கேளாதவர் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அந்த மழலைச் செல்வமின்றி மனம் உடைந்து வரம் வேண்டி தன் னிடம் வரும் பக்தர்களுக்கு மழலைச் செல்வத்தையும் கல்வி வரம் கேட்டு வருபவர்களுக்குக் கல்விச் செல்வத்தையும் வழங்குகிறார், செல்வ விநாயகர். பாலையும் தேனையும் வழங்கினால் சங்கத் தமிழையே அருளும் நாதன் அல்லவா! ஆலயத்தின் வருடாந்திரத் திருவிழாவாக மாசிமகம் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் மாசி மகம் நாளை (11.3.2017) நடைபெற உள்ளது. எனவே, மாசி மக உற்சவத்திற்கான ஏற்பாடுகளும் சிறப்புப் பூசைகளும் நடைபெற்று வரு கின்றன. ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் மாசி மகத்திற்கு முன்பு 13 நாட்களுக்கு சிறப்புப் பூசைகளும் உபயமும் நடத்தப்பட்டு வரும். மாசி மகத்தன்று நேர்த்திக் கடன் நிறைவேற்றும் பக்தர்கள் செரண்டாவில் உள்ள நாகத்தம்மன் ஆலயத்திலிருந்து பால்குடங்களை ஏந்தி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு வருவர். பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தக் கொண்டு வரும் பாலில் செல்வ விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும். அதன் பிறகு, சிறப்பு யாகங்களும் பூசைகளும் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இரவில் ஸ்ரீ செல்வ விநாயகர் உற்சவ மூர்த்தியாக அலங்காரத் தேரில் செரண்டா நகரில் வலம் வருவார். பக்தர்கள் செலுத்தும் அன்பையும் காணிக்கையையும் பெற்றபடி அவர் வரும் வீதியுலா வழியெங்கும் ஏறக்குறைய 8 பந்தல்கள் போடப்பட்டிருக்கும். மாசி மகத் திருவிழா தவிர மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, மாரியம்மனுக்கு ஆடி மாதச் சிறப்புப் பூசை, நவராத்திரி, ஆல யத்தில் கைலாசநாதராக எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுக்கு உரிய சிறப்புப் பூசைகள், துர்க்கையம்மனுக்கு ராகு கால பூசைகள், பாலமுருகனுக்கு சஷ்டி கால பூசைகள், கால பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள், பொங்கல் மற்றும் தமிழ்-ஆங்கிலப் புத்தாண்டின் போது சிறப்புப் பூசைகளும் அன்னதான மும் சிறப்பான வகையில் ஆலயத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் கைலாசநாதர் திருவருளால் புத்ர பாக்கியம் பெற்ற தம்பதியர்தான் அவருக்குத் திருவுருவச் சிலையைப் பிர திஷ்டை செய்தனர். மேலும், செல்வ விநாயகர் ஆலயத்தில் வேண்டிச் சென்ற பிறகு தொழில் விருத்தியடைந்த காரணத்தால், பக்தர் ஒருவர் ஆலயத்தில் கால பைரவருக்குத் திருவுருவச் சிலையைப் பிரதிஷ்டை செய்யும் செலவினை ஏற்றுக்கொண்டுள்ளார். இது போன்று பக்தர் பலரின் வேண்டுதல்களை நிறைவேற்றி அவர்களின் துயர் நீக்கி அருள்பாலித்து வருகிறார், ஸ்ரீ செல்வ விநாயகர். அறிவுப்பசியையும் வயிற்றுப் பசியையும் தீர்க்கும் அட்சயப் பாத்திரம் ஆன்மிகப் பணிகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் பல சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள மாணவர்கள் தங்களின் பாலர் கல்வியைத் தொடங்கும் வகையில் ஆலயத்தில் இந்து வித்யாலாயா பாலர்ப் பள்ளி திருவள்ளுவர் அறி வாலயத்தில் ஏறக்குறைய 3 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாலர் பள்ளியில் 46 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 ஆசிரியர்கள் பாடம் போதித்து வருகின்றனர். இவர்களுக்கான காலையுணவுச் செலவை ஆலய நிர்வாகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்த வட்டாரத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆலயம் சார்பாக சிறப்பு வகுப்புகளும் கணினி வகுப்புகளும் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளால் ஏறக்குறைய 130 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அங்கு வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கத்தில் ஆலயத்தில் அட்சயப் பாத்திரம் என்னும் திட்டம் ஆலயம் சார்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செல்வ விநாயகர் அருளால் தங்களின் பிரச்சினைகள் நீங்கிய பக்தர்கள் ஆலயத்திற்கு அரிசி போன்ற உணவுப் பொருட்களைத் தானமாகக் கொடுப்பதை அட்சயப் பாத்திரம் திட்டத்தின் வழி வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆலயம் வழங்கி வருகிறது. செல்வ வாழ்வருளும் செரண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் திருவடிகளே சரணம்!

பின்செல்

இந்து

img
இன்று அனுமன் ஜெயந்தி: விரதம் இருப்பது எப்படி?

ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.

மேலும்
img
மிதுனம் (சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017)

பிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ

மேலும்
img
சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017

குழந்தை உள்ளம் படைத்த ராசியில் பிறந்தவரே!

மேலும்
img
கைலாசநாதர் திருவருளால் புத்ர பாக்கியம் பெற்றோம்!

பக்தர்கள் படையெடுக்கும் திருத்தலமாக மாறியது ஸ்ரீ செல்வ விநாயகர்.

மேலும்
img
பாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா?...

ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ...

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img