வெள்ளி 22, அக்டோபர் 2021  
img
img

மிதுனம் (சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017)
செவ்வாய் 18 ஏப்ரல் 2017 18:01:52

img

பெற்ற தாயை தெய்வமாக மதிக்கும் தன்மை உடையவர். ஆனால் தனது சுய வருமானம் தனது குடும்பம் என்று ஆகிவிட்டபின் மனைவியின் குணமாறுதலாலும் பெற்றோரை உடன் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். ஆனாலும் மனதிற்குள் அது ஓர் குறைவாகவே இருந்துவரும். தெய்வ பக்தி, ஆன்மிக தெளிவு, பல கோவில் தரிசனம், யாத்திரை போன்றவை கிடைக்கும் பாக்கியம் பெற்றவர். தெய்வ சிந்தனை என்ற அளவில் யாரிடமாவது எதையாவது பேசிக் கொண்டே இருந்தால் தான் உங்களுக்கு திருப்தி நீதி நேர்மைக்கு எதிரான காரியங்களில் ஈடுபட அஞ்சுவீர்கள். உலகத்தில் யாரைப்பற்றி கேட்டாலும் தெரிந்தது போல பதில் சொல்வீர்கள். ஆனால் உங்களுக்குள் இயங்கும் உங்களின் பூர்வீக குல தெய்வ வழிபாட்டில் குறை வைத்துக் கொண்டு தான் இருப்பீர்கள். பிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ பரம்பரை போலத்தான் நினைப்பில் இருந்து வருவீர்கள். எந்த சூழ்நிலையிலும் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவீர்கள். அதிகாரத்துக்கு கட்டுப்பட்டுப் போக முடியாத மனநிலை என்பது உங்களுடன் பிறந்த குணம் ஆகும். மற்றவர்களுக்கு சொல்லும் ஆலோசனை எல்லாம் அப்படியே பலிக்கும். உங்களின் யோசனைத் திட்டம் உங்களுக்கு மட்டும் சரியாக வராது என்ற அறிவான ராசியில் பிறந்தவரே! இன்று வரை என்னதான் நடந்து வருகிறது? குருபகவான் 4 ஆம் இடத்திலும் சனீஸ்வரர் கடந்த இரண்டு மாதங்களாக அதிசாரமாக 7 ஆம் இடத்திலும், ராகு 3 ஆம் இடத்திலும், கேது 9 ஆம் இடத்திலும் இருந்து வருவதால் ஒரு சிலருக்கு வீடு, மனை, நிலம், தொழில், வாகனம், சொந்தங்கள் என்ற நிலைகளில் கடந்த எட்டு மாதங்களாக பிரச்சினைக்குப் பிறகும் பிரச்சினை என்ற விதத்தில் தான் இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு திடீரென உடல் ஆரோக்கிய குறைபாடுகள் வந்து மருத்துவச் செலவுகள், தப்பித்ததே தம்பிரான் புண்ணியம் என்ற அளவில் இருந்து வருகிறீர்கள். ஒரு சிலருக்கு அடிவயிறு சம்பந்தமான சிறுநீரக பிரச்சினை, கிட்னி பிரச்சினை, பெண்களுக்கு கரப்பப்பை சம்பந்தபமான பிரச்சினை ஒரு சிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகளால் மருத்துவ செலவுகள் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து சம்பந்த பிரச்சினைகளில் முடிவுக்கு வராத நிலையில் பலவருடங்களாக இருந்து கொண்டேவருகிறது. ஒரு சிலருக்கு கணவன் மனைவி உறவில் பிரச்சினை, பிரிவு என்று மனதுக்கு நிம்மதி இல்லாத நிலையில், என்னமோ, எப்படியோ ஒவ்வொரு நாளும் போய் கொண்டே இருக்கிறது என்ற நிலையில் தான் இருந்து வருகிறீர்கள். கடனே பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இப்போது உள்ள பிரச்சினையே எப்படி, கடனை அடைத்து மீண்டு வரப்போகிறோம் என்பது தான். ஒருசிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, ஒரு சிலருக்கு மூட்டுவலி, முதுகுவலி, ஒரு சிலருக்கு மூச்சு இரைப்பு, ஆஸ்துமா, போன்ற நோய்களால் மருத்துவச் செலவுகள் பெருகிக் கொண்டே போகிறது. ஒரு சிலருக்கு தொழிலில் பிரச்சினை, ஒரு சிலருக்கு வியாபாரத்தில் பிரச்சினை, ஒரு சிலருக்கு உத்தியோகத்தில், ஒரு சிலருக்கு குடும்ப உறவுகளால் பிர்ச்சினை, ஒரு சிலருக்கு வீடு, மனை, தொழிலால் கடன் ஏற்பட்டதால் பிரச்சினை என்று கோர்ட், வழக்கு என்ற அளவில் இருந்து வருகிறார்கள். வரும் தமிழ் புத்தாண்டிலாவது இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் நல்ல முடிவு வந்து விடாதா என்ற எதிர் பார்ப்பில் வாழ்ந்து வருகிறீர்கள். தமிழ் புத்தாண்டு பலன்கள் என்னதான் சொல்கிறது? வரும் 14.4.2017 முதல் அடுத்த புத்தாண்டுக்குள் மூன்று முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடக்க இருக்கிறது. அவை ராகு கேது பெயர்ச்சி குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஆகும். இதனால் இந்த வருடத்தில் உங்கள் வாழ்க்கையில் எல்லா வகையிலும் மாற்றங்கள் ஏற்றங்கள், வாய்ப்புகள் வரப்போகிறது. இதுவரை நீங்கள் எதிர் பார்த்து காத்திருக்கும் அத்தனை மாற்றங்களும் வரப்போகிறது. ஜோதிடம் என்பது தற்போதைய வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி மட்டுமே என்பதனை புரிந்துக் கொண்டு, கிரகங்கள் நாளை நடக்க போவதை கோடு போட்டு மட்டுமே காட்டும், அது நம்மை வழி நடத்தாது, நாம் தான் அந்த காலத்தை புரிந்து கொண்டு நடத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகில் தானாக எதுவும் நடக்காது. நாம் தான் இந்த உலகத்தை நடத்திக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை உள்ளபடியே நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால் நீங்கள் உங்களை நம்பி உங்கள் தகுதி, திறமைக்கு ஏற்ற தொழிலில் வியாபாரத்தில், உத்தியோகத்தில், நீங்கள் செய்யவேண்டிய முயற்சிகளை செய்தால், கிரகங்கள் உங்களுக்கு உதவியாக இருந்து செயல்படும். நீங்கள் முயற்சிகளை முழுமையாக செய்யாத நிலையில் கிரகங்கள் உங்களுக்கு உதவியாக செயல்படாது. வரும் 12.9.2017 முதல் 5.1.2018 க்குள் மகன் அல்லது மகள் சம்பந்தமான மனக் கவலைகள் மறையும். குருபகவான் 5 ஆம் இடத்திற்கு வருவதாலும், உங்கள் மனதில் ஓர் தெளிவும் உத்வேகமும் உண்டாகும். இதுவரை இருந்துவரும் உங்களின் தள்ளிப்போடும் குணம், அசட்டையான குணம் எல்லாம் உங்களை விட்டுப்போகும். நல்லவர்களை சந்திப்பீர்கள், நல்லவாய்ப்புகளை உங்களின் மனது உருவாக்கும். குடும்பத்தில் இருந்து வரும் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். 27.10.2017 முதல் 21.2.2018 க்குள் நிலையாக வருமானம் வரக்கூடிய தொழில் வியாபாரம் வேலை அமையும். நோய் நொடியிலிருந்து விடுதலை பெற்று நிம்மதி அடைவீர்கள். பிரச்சினையை கொடுத்து பிரபலயோகம் வரப்போகிறது வருமானம் சம்பந்தமான வகைகளில் சிறப்பான உயர்வுகளையே பெற்றுக் கொண்டே இருக்கப் போகிறீர்கள். அதிலும், சனீஸ்வரர் கடல் ராசியில் இருந்துவருவதால், ஒரு சிலருக்கு கடல் கடந்து வாழ்பவர்களுடன் தொடர்புகள் ஏற்பட்டு, அதன் மூலம் தொழில், வியாபாரம், வேலை வாய்ப்புகள் வருவதற்கும் கிரக நிலைகள் சாதகமாக இருக்கப்போகிறது.அவசரப்படாமல், பொறுமையாகப் பயன் படுத்திக் கொண்டு கடன் படாமல், ஒழுக்கக் கேடான பழக்க வழக்கத்திற்கு ஆளாகாமல் முன்னேறுவதற்கான வழியைப் பாருங்கள். வியாபாரத்தில் மிகவும் சோதனை வந்தாலும் நிலைமையை சமாளித்து விடுவீர்கள். சரக்கு இருந்தால் கஸ்டமர்கள் இல்லை. கஸ்டமர்கள் இருந்தால் சரக்கு இல்லை என்ற நிலை மாறும். கடன் குறையும், கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல் சிரமம் சரியாகும். வியாபாரத்தை விட்டு விட்டு வேறு ஏதாவது கைத்தொழில் செய்யலாம் அல்லது கூலிக்கு வேகைக்காரனாகப் போகலாம் என்ற அளவுக்கு மனதில் வெறுப்பும் வேதனையும் தோன்றி இத்தனை நாளும் பொறுமையாக சமாளித்து வந்த உங்களுக்கு இவையெல்லாமே நல்லவையாக நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்துவிட்டு வேலை தேடுவோருக்கு தகுதியான எதிர் பார்க்கும் வேலை கைமேல் கிடைக்கும். மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்வீர்கள். மேல்படிப்பு படிக்க வைப்பதற்காக செலவு செய்வீர்கள். அவர்களின் தொழில் சம்பந்தமான வெளியூர் செல்ல ஏற்பாடு செய்து தருவீர்கள். பூர்வீக குல தெய்வ ஆலயங்களுக்குச் சென்று பாரம்பரிய பூஜை முறைகளைச் செய்து மனதிருப்தி அடைவீர்கள். புராதன கோவில்கள் தரிசனம், மகான்கள் சந்திப்பு தானதர்ம காரியங்கள் செய்யும் பாக்கியம் எல்லாம் கூடிவரும். காலதாமதமாகி வரும் திருமணம் கூடிவரும். கணவன் மனைவியிடையே இருந்துவரும் மனவேற்றுமை அகன்று மகிழ்ச்சி உண்டாகும். தந்தை, தந்தைவழி பெரியவர்களுக்கு நன்மை உண்டாகும். இதுவரை சென்று வராத புராதன கோவில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டு வருவீர்கள். உங்கள் மகள் அல்லது மகன் போன்றோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நோய்நொடிகள் அகலும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் அமையும். திடீர் திடீரென்று உண்டாகும் கடன் பிரச்சினை விபத்துகளிலிருந்து தப்பித்து விடுவீர்கள். உங்கள் மனைவி வகையில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவு உண்டாகும். இது தற்போது வானத்தில் சஞ்சரித்து வரும் கோள்சாரப் பலன்கள் மட்டுமே. உங்களின் பிறந்தகால ஜாதகத்தில் இப்போது நடந்து வரும் தசாபுக்திப் பலன்களுக்குத் தகுந்த படி இந்த பலன்களும் இணைந்து பலன்களைக் கூட்டியோ குறைத்தோ கிடைக்கப் பெறுவீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். சில விரயச்செலவுகள் வந்துதான் லாபம் கிடைக்கும் வாடகை வீட்டில் இருப்போர், புது வீடு வாங்கி குடிபெயர்வீர்கள். சொந்த வீட்டில் இருப்போர் வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவது, புதிதாக பெயிண்ட் பூசுவது போன்ற புத்துணர்ச்சியான வேலைகளைச் செய்வீர்கள். வியாபாரம் செய்வோர் புதிய இடத்தை வாங்கி வியாபாரம் செய்வார்கள். கெடு பலன்கள் குறையும். விரயச் செலவுகள் வந்துதான் தீரும் என்றாலும், அது உங்கள் பிள்ளைகளின் முயற்சிகளால் தடுக்கப்படும். சுபவிரயச் செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. பணம் பல வழிகளிலும் வந்து சேரும். சுகம் கூடும் அதாவது கணவனுக்கு மனைவியாலும் மனைவிக்கு கணவனாலும் தாம்பத்திய சுகம் அதி கரிக்கும். இதுவரை குடுமிப்பிடி சண்டை போட்ட தம்பதிகள் கூடிக் கொஞ்சி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். தகப்பனார் பொருளாதார நிலையும் செல் வாக்கும் உயரும். அவரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் ரீதியான பிரச்சினைகளுக்காக இடம் விட்டு இடம் மாறுதல் ஊர்விட்டுஊர் மாறுதல் ஒரு சிலர் வெளிநாடு செல்லுதலும் கிரக நிலைப்படி நன்மையைக் கொடுக்கும். இடமாறுதலும், சம்பள உயர்வும் தேடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களுக்கென்று ஓர் மரியாதை வெளிநாடு சென்று படிக்க நினைப்போருக்கு அனுகூலம் ஏற்படும். சாஃப்ட்வேர் எஞ்சினியர், டாக்டர், சிவில் இஞ்சினியர், கொத்தனார், வெல்டர் மெரின் சம்பந்தப்பட்ட வேலை, டெக்னீசியனாக செல்ல முயற்சி செய்து தற் போது காலதாமதமாகி வருவோருக்கு வெளிநாட்டிலிருந்து நல்லவாய்ப்புகள் நாடி வந்து சேரும். உயர்ந்த சம்பளத்தில் வேலைக்கு அமருவார்கள். தாய், மனைவி, பிள்ளைகளை பிரிந்து சென்று சம்பாதிக்கும் நிலையை கிரகப்படி செய்தே தீரும். வெளியூர், வெளிநாடு தொடர்பு தொழில், உத்தியோகம், வியாபாரம் செய்வோருக்கு மாற்றம் மாறுதல்கள் எல்லாம் வந்தே தீரும். உங்களிடமிருந்த வைராக்கியம், வறட்டு கௌரவம் விலகி புத்திசாலித்தனமாக சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். அந்தஸ்து, புதிய பொறுப்பு வந்து சேரும். மூளையை மூலதனம் ஆக்கி தொழில் புரிவதில் கெட்டிக்காரரான உங்களுக்கு டாக்குமெண்ட்ஸ், புத்தக வெளியீடு எழுத்துத் துறை, குருக்கள் போன்ற ஆன்மிக வழி தொழில் செய்வோருக்கு அனைத்து வகையிலும் குறைவில்லாமல் எல்லாம் நடக்கும். எவ்வளவு முயற்சி செய்கிறோமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ளும் நல்ல நேரமாகும். பரிகாரம் தொடர்ந்து 27 சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வெண்ணெய் சாற்றி, மாலை அணிவித்து எட்டு விளக்கேற்றி பூஜை செய்துவர குடும்ப பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். உங்களின் ஜாதகத்தில் லக்னத்திற்கோ, ராசிக்கோ 1,4,7, 10 ஆம் இடங்களில் குருபகவான் நின்றால் செல்வமும், செல்வாக்கும் உள்ள கோடீஸ்வரராகத்தான் இருந்து வருவீர்கள், தசா புக்தியால் கீழே போய்விட்டாலும் அம்ச யோகம் உங்களை மறுபடியும் உயர்த்திவிடும்.

பின்செல்

இந்து

img
இன்று அனுமன் ஜெயந்தி: விரதம் இருப்பது எப்படி?

ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.

மேலும்
img
மிதுனம் (சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017)

பிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ

மேலும்
img
சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017

குழந்தை உள்ளம் படைத்த ராசியில் பிறந்தவரே!

மேலும்
img
கைலாசநாதர் திருவருளால் புத்ர பாக்கியம் பெற்றோம்!

பக்தர்கள் படையெடுக்கும் திருத்தலமாக மாறியது ஸ்ரீ செல்வ விநாயகர்.

மேலும்
img
பாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா?...

ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ...

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img