ஏனெனில் இங்குக் குடிசைத்தொழிலாகத் தீப்பெட்டி தயாரிப்பு நடைபெறுவதால், சிறுவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பட்டாசு வேலையில் ஈடுபடுத்துவது சாதாரணமாக நடைபெறுகிற ஒன்று. இதுபோன்ற இருண்ட குழந்தைகளின் வானத்தை வானவில்லாக்க தொடங்கப்பட்டதுதான் ‘நிலாப் பள்ளி’. இது குறித்து தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி உற்சாகமாகப் பேசுகிறார். ‘‘2002ம் ஆண்டில் நிலாப்பள்ளி முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியின் நோக்கமே குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை முற்றிலும் ஒழிப்பதும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே! ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் ஒரு கிராமத்தில் நிலாப் பள்ளி நடைபெறும். பெற்றோர்களை இந்நிகழ்வில் கலந்துகொள்ள வைத்து, உற்சாகப்படுத்தி அவர்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வருவதுதான் லட்சியம். பொதுமக்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், சுயஉதவிக்குழுப் பெண்கள் உட்பட அனைவரும் கூடும் இந்நிகழ்ச்சியில், எல்லோரையும் கவரும் விதத்தில் கல்வியின் அவசியம் குறித்த நிகழ்ச்சிகள் அமையும். ஒவ்வொரு பௌர்ணமி இரவும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை குழந்தைகள் தங்களின் திறமைகளைப் பெற்றோர், ஊர் மக்கள் மத்தியில் நிகழ்த்திக் காட்டுவார்கள்’’ என்றவரைத் தொடர்ந்தார் நிலாப்பள்ளி ஆசிரியரான உமையாள். ‘‘விருதுநகர் சுற்றுவட்டாரத்திலுள்ள பல்வேறு கிராமங்களிலும் நிலாப் பள்ளிகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டு இருக்கோம். இங்கு குழந்தைகள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவார்கள்