குரு பெயர்ச்சி பலன்கள் 2016 கணித்தவர் ஜோதிட ஆசான் பண்டிதர் பச்சை ராஜென் குரு பெயர்ச்சி குடும்பத்திற்கு எல்லாம் வளர்ச்சி குரு பிரம்மா! குரு விஷ்ணு! குரு தேவோ! மகேஸ்வரஹ! குரு சாட்சாத்; பரபிரம்மா! தஸ்மைஸ்ரீ குருவே நமஹ! ஸ்ரீ காஞ்சி மாமுனிவர், மகா பெரியவர், தனது 100 ஆவது வயது காலத்திலும் விரும்பிப் பின் பற்றிய திருக்கணித பஞ்சாங்கத்தின் படி துன்முகி வருடம், ஆடி மாதம் 27 ஆம் நாள், வியாழக்கிழமை 11.8.2016 அன்று இரவு 9.30 மணிக்கு வளர்பிறை, நவமி, திதி அனுசம் நட்சத்திர விருச்சிகம் ராசியில் மீனம் லக்னத்தில் குரு பகவான் சிவபெருமானின் உத்திரம் நட்சத்திர வாகனத்தில் சிம்மம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி! வாக்கியப் பஞ்சாங்கப்படி 2.8.2016 ஆடி மாதம் 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 9.26 க்கு குரு பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். வாக்கியப் பஞ்சாங் கத்தை பின்பற்றியே கோவில்களில் குரு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனை நடைபெற்று வருகிறது. புத்திசாலி புதன் உச்சம் பெற்ற ராசியில் குரு பகவான் பெயர்ச்சி நல்ல அறிவாற்றலுக்கும், தெளிவான புத்திக்கும் அதிபதி புதன். இவர் உச்சம் பெற்ற ராசிநாதன் கன்னி ராசி ஆகும். இதில் 12 வருடத்திற்குப் பிறகு வந்து தனது குரு ஆதிபத்தியத்தை செய்யவருவதும் மிகவும் சிறப்பு ஆகும். இதனால் நாட்டிலும் வீட்டிலும், உலகத்திலும், நிர்வாகத்திலும் புதிய, நல்ல தெளிவான விஞ்ஞான மாற்றங்கள் ஏற்படப் போகிறது. இதுவரை பேச பயந்த அத்தனை விஷயங்களையும் மக்கள் வெளிப்படையாக பேசப் போகிறார்கள். புதன் உச்சம் பெறும் ராசியான கன்னி ராசி குரு பகவானுக்கு நட்பும் இல்லை, பகையும் இல்லை என்பதான வீடு ஆகும். நட்பும் அவர்தான் பாதகாதிபதியும் அவர்தான். இதனால் குரு பகவான் இந்த வீட்டில் இருந்து தயவு தாட்சன்யம் இல்லாமல் சரியான நீதிபதி போலவும் செயல்படுவார். கருணை உள்ளம் கொண்ட தாயாகவும், தந்தையாகவும் செயல்பட்டு தனது கன்னி குருப்பெயர்ச்சி ஆதி பத்தியத்தை நடத்துவார். குரு பகவானின் கிழமையான வியாழக்கிழமை பெயர்ச்சி ஆவதும், குரு பகவானின் மீனம் லக்னத்தில் பெயர்ச்சி ஆவதும், ஆன்மிக தெளிவான விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆவதும், சிவபெருமானின் உத்திரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவதும், அதுவும் வளர்பிறையில், நவமி திதி யில் பெயர்ச்சி ஆவதும், மிகுந்த சிறப்புகளை செய்யப்போகும் பெயர்ச்சி ஆகும். நாம் பிறந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது எல்லாம் நடக்கப் போகிறது. அடக்கி வைத்து இருந்த அத்தனை உண்மைகளும் வீறுகொண்டு எழுந்து தனது உரிமைகளை பேசப்போகிறது. அநீதியையே அடுத்தடுத்து பேசி வீட்டிலும், நாட்டிலும் அலுவலகத்திலும், பொது சங்கங்கங்களிலும் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்து வருபவர்களுக்கு எல்லாம் சரியான தீர்ப்பு வந்து அவமானப் படப் போவதைப் பார்க்கப் போகிறோம், உண்மைகள் உயர்ந்து பேசப் போகிறது. மக்கள் எங்கும் மகிழ்ச்சியாக வாழப்போகிறார்கள். மதுவை படிப்படியாக மக்களே வெறுத்து ஒதுக்கும் நிலை வரப்போகிறது. சாதியாலும், மதத்தாலும் பிரித்தாளும் அரசாங்கத்தின் அநீதி சட்டங்கள் திருத்துவதற்கு மக்களே குரல் எழுப்ப போகிறார்கள். திருக்குறளை கொடுத்த திருவள்ளுவரின் புகழ் வரும் 28.9.2016க்குள் மேலும் மேலும் உயரப் போகிறது. வானளா விய புகழை அரசாங்கம் தரப்போகிறது. கங்கை இங்கே வரப் போகிறது கன்னியா குமரியை தொடப் போகிறது என்ற கொள்கைக்கு அரசாங்கத்தின் முதல் ஒப்புதல் சட்டம் ஆக்கப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் நடத்தப்படப் போகிறது. தண்ணீர் என்ற நதி மத்திய அரசாங்கம் படிப்படியாக தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படும் சட்டம் இயற்றப்படும். கன்னி குருப்பெயர்ச்சியால் நன்மை பெறப்போகும் மூன்று சிறப்பான ராசிகள் பொதுவாக கோட்சாரத்தில் குரு பகவான், ஒவ்வொரு ராசிக்கும் 2,5,7,9,11 ஆம் இடங்களில் வரும் போது, யோகங்களையும், சுப பலன்களையும் வாரி வழங்குவார். திருமணத்திற்கான குருபலன் வியாழ நோக்கு என்று கூறுவதும் லக்னத்திற்கு அல்லது ராசிக்கு 2,5,7,11 ஆம் இடங்களுக்கு குரு பகவான் வரும்போது, அவரின் பார்வை படும் ராசிகளுக்கு அப்போது கிடைக்கும் சுபப் பலனாலும் முடிவுக்கு வராத திருமண பாக்கியமும் முடிவுக்கு வந்து விடுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்ற நியதிப்படி கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகும் குருபகவான் தனது 5,7,9 ஆம் பார்வையால், மகரம் மீனம் ரிஷபம் ராசிக்காரர்களைத் தான் பார்வை செய்கிறார். இதனால் இந்த கன்னி குருப்பெயர்ச்சியால் மிகப் பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடையப் போகிறவர்கள், மகரம், மீனம், ரிஷபம் என்ற மூன்று ராசிக்காரர்கள் மட்டுமே, என்பதை உறுதியாகச் சொல்லவும். நல்லமாற்றங்களையும் ஏற்றங்களையும் பெறப் போகின்ற இரண்டு ராசிக்காரர்கள் அடுத்தபடியாக நன்மையை பெறப் போகிறவர்கள் சிம்மம், விருச்சிகம், ராசிக்காரர்கள் ஆகும். இவர்களுக்கு இதுவரை தடையாகிக் கொண்டே வரும் அத்தனை காரியங்களிலும் எதிர்பாராத வெற்றி, அனுகூலம் கூடிவரப் போகிறது. இதுவரை அனுபவித்து வரும் குடும்பத்து பிரச்சினை, கடன் பிரச்சினை, தொழில் பிரச்சினை, கோர்ட் வழக்கு, நோய் பிரச்சினை என்ற அத்தனை பிரச்சினைகளிலிருந்து 18.9.2016 க்குள் சிலருக்கும் 4.12.2016 க்குள் ஒரு சிலருக்கும் 11.9.2017 க்குள் பல பேருக்கும் நிவர்த்தி நிம்மதி படிப்படியாக கிடைக்கத் தான் போகிறது. கவலையே வேண்டாம். தற்போது இருந்து வரும் நிலையிலிருந்து நல்ல மாற்றங்களையும் இந்த ஒரு வருடத்திற்குள் பெறத்தான் போகிறீர்கள். இவர்களை சாதாரணமாக நினைத்தவர்களுக்கு இவரும் சாதித்து விட்டாரே என்று சொல்லும் அளவுக்கு முதலில் உங்களிடம் ஒரு சிலரிடம் இடையில் வந்து ஒட்டிக் கொண்ட கெட்ட பழக்க வழக்கத்தில் இருந்தும், நண்பர் சேர்க்கையிலும் திடீரென குருபெயர்ச்சிக்கு பிறகு மாறப் போகிறீர்கள். இதனால் உங்கள் மனதிற்குள் புதிய தெம்பும் தெளிவும் வந்து அமரப்போகிறது. அடுத்தப்படியாக தொழிலிலும் குடும்ப அளவிலும், எல்லார் மாதிரி நாமும் வாழ்ந்து தீர வேண்டும் என்ற எண்ணம் ஒரு குரு மகானை சந்தித்த பிறகு உங்களுக்கு வரப்போகிறது. ஏற்கெனவே நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்தவராக மறுபடியும் ஆன்மிக சிந்தனைகளும் உங்களுக்குள் வந்து சேரப் போகிறது. விபரீத ராஜயோகத்தை கொடுத்து பின் கெடுத்து கொடுக்கப் போகும் மூன்று ராசிக்காரர்கள் அடுத்தபடியாக பண வரவை பல வழிகளிலும் பார்க்கப் போகிறவர்கள், தனசு, கும்பம் மேஷம் ராசிக்காரர்கள் ஆகும். பணத்தால் தானே பிரச்சினை பணம் என்ற தனம் ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பணம் வரப்போகிறது. என்பது உறுதி. இனி இதற்கான முயற்சிகளை மட்டும். முழு மன ஈடுபாட்டோடு முழுமையாக செய்யுங்கள். இதுவரை வராத பணம் இனிமேல் வருவதை பார்ப்பீர்கள். எல்லாம் காலம் செய்யும் கோலம் தானே! ஒரு சிலருக்கு தகுதிக்கு மீறிய பெரிய, வாய்ப்புகள் வந்து உயர்த்தப்படுவீர்கள். அதாவது விபரீத ராஜயோகம் போல திடீர் திடீர் என்ற முன்னேற்றமும் வரும், எதிர்பாராத பிரச்சினையும் வரும் இந்த காலத்தில் நீங்கள் எதை செய்தாலும் எதை பேசினாலும் இதுதான் நடக்க போகிறது என்று உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே பண வரவை பார்க்கலாம். கவனமாக பொறுமையாக இருந்தால் யோகத்தை பெறப் போகும் நான்கு ராசிக்காரர்கள் அடுத்து மிக குறைவான நன்மைகளை அடையப் போகிறவர்கள் மிதுனம், கடகம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் ஆகும். என்னதான் முயற்சிகள் செய்தும், என்னை மட்டும் ஏதோ ஒன்று கவனித்துக் கொண்டே இருந்து செய்கின்ற அத்தனை காரியத்திலும் வரும் நல்ல வாய்ப்புகளில் தடையையும், தாமதத்தையும் கொடுத்து வருவது மாதிரி இருக்கிறதே, அந்த ஏதோ ஒன்று எது என்ற கேள்வி இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் இருந்து வருகிறது. இதற்கான பதல் காலம். ஆம், காலம் என்பது தான் ஏதோ ஒன்று போல வேலை செய்து வருகிறது. கெடுக்கும் காலம் வரும் போது கெடுதலை செய்யும் அதே காலம், கொடுக்க வேண்டிய காலம் வரும் போது கொடுக்கும் பலனை செய்தது. இதே போல, கொடுக்கும் காலம் இதோ வந்து கொண்டிருக்கிறது. அது வரும் போது உங்களை கேட்டா, கொடுக்கப் போகிறது. எல்லாருக்கும் விதி வழி தான் மதி செல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தனது தத்துவ ஞானத்தால் புத்தி உள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை, என்று எழுதி பாட வைத்தார். மேற்கண்ட இந்த நான்கு ராசிக்காரர்கள் தங்களிடம் இடையில் வந்து ஒட்டிக் கொண்டதா தன்னை பற்றிய பெருமை, மற்றவர்களிடம் பார்க்கும் குறைகள், மேலும் இடையில் வந்த ஒரு சில நண்பர்களிடமிருந்து வந்து சேர்ந்து விட்ட கெட்ட பழக்க வழக்க செலவீனங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது என்று முடி வெடுத்தால், வரப்போகின்ற பிரச்சினை பாதிப்புகளிலிருந்து தப்பித்தது மட்டும் அல்ல, பெரிய யோகமான வாய்ப்புகளையும் பெற்று விடலாம் என்பதையும் உங்களுக்கு சொல்கிறேன். மேலும் இவர்கள் தெய்வீக உள்ளம் கொண்ட குருக்களையும், பூசாரிகளையும் அணுகி இதற்கான பூஜைகளை, அதிக பணத்தை செலவு செய்யாமல் மனதை முழுமையாக ஈடுபடுத்தி தாங்களே பரிகார பூஜைகளை செய்து கொண்டால் அத்தனை பிரச்சினைகளும் சூரியனைக் கண்ட பனியைப்போல விலகுவதை உணர முடியும் எல்லாம் வல்ல இறைவனை சரணாகதி அடைந்தால் நடக்காதது எது. குருப் பெயர்ச்சியன்றைய 11.8.2016 கிரக நிலையும் குருவின் பார்வையும் குரு பகவான் என்றால் யார்? நவக்கிரகங்களில் சுப கிரகங்களாக வர்ணிக்கப்படுபவை குரு, சுக்கிரன் சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் மட்டுமே! இதிலும் வளர்ப்பிறைச் சந்திரன் சுபராகவும், தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் கருதப்படும். அதேபோல புதனும் சுபகிரகத்தோடு சேருகிறபோது யசுபத்தன்மை உடையவராகவும், அசுபரோடு சேருகிறபோது பாபத் தன்மை உடையவராகவும் கருதப்படும். ஆகவே முழு சுபகிரகங்களாகச் செயல்படுவது குருவும் சுக்கிரனும் மட்டும்தான் மற்ற ஐந்து கிரகங்களும் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது) முழு பாபகிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்திருக்கிறது. மேற்கண்ட இரண்டு முழு சுபகிரங்களில் குருவை தேவகுரு என்றும், சுக்கிரனை அசுர குரு என்றும் புராணங்கள் வர்ணிப்பதால் குரு ஒருவரையே முழு சுபகிரகம் எனவும் நல்லதைச் செய்ய வல்லவர் எனவும் பாராட்டலாம். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்றும் கோடி தோஷம் விலகும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குரு வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பொதுவாகச் சொல்லுவது போல குருப்பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்றும் பொதுவாக எதிர்பார்க்கலாம் நம்பலாம். சுபகிரகங்களில் குருப்பெயர்ச்சியையும் பாபகிரகங்களில் சனிப்பெயர்ச்சியையும் முக்கியமாக எடுத்துக் கொண்டு பலன்கள் வெளியிடப்படுகின்றன. குரு வருடத்து
ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.
மேலும்பிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ
மேலும்பக்தர்கள் படையெடுக்கும் திருத்தலமாக மாறியது ஸ்ரீ செல்வ விநாயகர்.
மேலும்ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ...
மேலும்