இவர் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதுடன் முத்தக்காட்சிகளில் தாராளமாக நடித்திருக்கிறார். ராஜீவ் கஹன்தல்வால் நடிக்கும் ‘ஃபீவர்’ த்ரில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கேத்ரினா முரினோ கூறும்போது, ‘பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது ஏற்றேன். ராஜீவின் கேர்ள் பிரண்ட் வேடம். நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சியில் நடிக்க அசவுகரியமாக இருந்ததா என்கிறார்கள். அதுபோன்ற காட்சிகளுக்கு நான் ஒருபோதும் தயங்கியது கிடையாது. ‘கெஸினோ ராயல்’ படத்தில் நடித்தபோதே டேனியலுடன் சரமாரியான முத்தக்காட்சியில் நடித்திருக்கிறேன். அதுபோல் இப்படத்திலும் ராஜீவுடன் சரமாரியாக முத்தக்காட்சியில் நடித்துள்ளேன். அதில் எனக்கு கஷ்டம் இல்லை. விரைவில் இந்தி பேசக் கற்றுக்கொண்டு பாலிவுட் நடிகைகளுக்கு சவாலான இடத்தை பிடிப்பேன்’ என்றார்.