இதன் பிறகு தங்கம் விலை குறைய துவங்கியது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கடந்த 26ம் தேதி சவரனுக்கு ரூ.88 குறைந்தது. அடுத்த நாளே ரூ.184 அதிகரித்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,472க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ஒரு கிராம் ரூ.2,972க்கும் ஒரு சவரன் ரூ.23,776க்கும் விற்பனையானது. இந்த திடீர் உயர்வு நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: நியூயார்க்கில் பெடரல் வங்கி கூட்டம் நடந்தது. இதில், ஜப்பான் கரன்சி யென்னுக்கு எதிராக வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வட்டி உயர்த்துவது பற்றி கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த முடிவு மேலும் 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.