இயேசு எப்போதுமே ஏழை எளியவர்களுடனும், பாவிகளுடனும் கலந்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். பாவத்தை வெறுத்த அவர், பாவிகளை நேசித்தார். அவர் ஏழைகளையும், பாவிகளையும் அரவணைத்துக் கொண்டது பலருக்கும் பிடிக்கவில்லை. அந்த சூழலில் ஒரு இளைஞன் இயேசுவிடம் வந்தார். அவர் மிகப்பெரிய பணக்காரர். ‘போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?’ வந்தவர் கேட்டார். அவருடைய கேள்வியின் தொனியில் இயேசு என்ன பதில் சொல்கிறார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாய் இருந்தது. உண்மையிலேயே விண்ணக வாழ்வுக்குள் நுழைய விரும்பியவராய் தெரியவில்லை. ‘நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நீர் நல்லவராக வாழ விரும்பினால் கட்டளைகளைக் கடைபிடியும்’ இயேசு பதில் சொன்னார். ‘எந்தக் கட்டளைகளைச் சொல்கிறீர்கள்?’ ‘பத்துக் கட்டளைகளைப் பற்றி அறிந்திருக்கிறாயா? கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட’ இயேசு சொன்னார் ‘இவைகள் எல்லாவற்றையும் கடைபிடிக்கிறேன், எதிலும் தவறியதில்லை’. ‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உன் அயலான் மீதும் அன்பு செய்’ என்னும் கட்டளையையும் கடைப்பிடி. விண்ணகத்தில் நீ நுழையலாம்’ இயேசு சொன்னார். ‘அதையும் நான் கடைப்பிடிக்கிறேன் இயேசுவே....’ அவன் சொன்னான். உண்மையில் அவன் அதைக் கடைப்பிடிக்கவில்லை. தன்னைப் போல அயலானையும் நேசிப்பவன் செல்வந்தனாய் இருக்க முடியாது. ஏழைகள் உண்ண உணவில்லாமலும், வறுமை நிலையிலும் இருக்கும் போது செல்வத்தை களஞ்சியத்தில் சேர்த்துக் கொண்டே இருப்பவர் எப்படி ‘தன்னைப் போல் அயலானை நேசிப்பவர்’ ஆக முடியும்?
யாரெல்லாம் கடவுளுக்காக உங்கள் வீடுகள், உறவினர்கள், பெற்றோர், சொத்துகள்
மேலும்புதுவை உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் உள்ள புனித புதுமை
மேலும்இன்றைய மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் நாட்டுக்கும், சிரியா, ஜோர்டான் ஆகிய
மேலும்