அதன் பிறகு மூன்றரை ஆண்டு காலம் இயேசு தெய்வீக நிலையில் இருந்து போதனைகள் செய்யத்தொடங்கினார். அவரது போதனைகளில் மிகப்பெரியதாகவும், மிகமிக முக்கியமானதாகவும் போற்றப்படுவது அவரது மலைப்பிரசங்கம். மனித குலம் மகிழ்ச்சியான வாழ்வை அடைவதற்கான பாதையை அவர் மலைப்பிரசங்கத்தில் செய்த போதனைகள் சுட்டிக்காட்டுகின்றன. இயேசுவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான மத்தேயு தனது நூலில் 5 முதல் 7 வரையிலான அதிகாரங்களில் மலைப்பிரசங்கத்தின் மகத்துவத்தை பதிவு செய்திருக்கிறார். இவற்றில் காணப்படும் வசனங்கள் ஒவ்வொன்றுமே மகிழ்ச்சி நிறைந்த வாழ்வுக்கான திறவுகோலாக இருக்கின்றன. அதில் ‘உப்பும் ஒளியும்’, ‘எதிரிகளும் நண்பர்களே’, ‘வானத்து பறவைகள் உவமை’ போன்றவை கிறிஸ்துவ வாழ்வின் அடித்தளமாக அமைந்திருக்கின்றன. மக்கள் கூட்டத்தைப் பார்த்த அவர், மலைமீது ஏறினார்; அவர் உட்கார்ந்தபோது, சீடர்கள் அவரிடம் வந்தார்கள். அவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார் இயேசு: “நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பு உவர்ப்பிழந்து போனால், அதற்கு எப்படி மீண்டும் உவர்ப்பூட்ட முடியும்? வெளியே கொட்டப்பட்டு மனிதரால் மிதிக்கப்படுவதற்கே தவிர வேறெதற்கும் அது உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள். கண் தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் தெளிவாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்; உங்கள் கண் பொல்லாததாக இருந்தால், உங்கள் முழு உடலும் இருளடைந்து இருக்கும். மலைமீது இருக்கும் நகரம் மறைவாயிருக்க முடியாது. உங்கள் ஒளியை மனிதர்களுக்கு முன்பாக பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு உங்கள் பரலோகத் தந்தையை மகிமைப்படுத்துவார்கள்” (மத் 5:13-17) என மனித வாழ்க்கையின் மதிப்பை அழகாக விளக்கினார்.
யாரெல்லாம் கடவுளுக்காக உங்கள் வீடுகள், உறவினர்கள், பெற்றோர், சொத்துகள்
மேலும்புதுவை உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் உள்ள புனித புதுமை
மேலும்இன்றைய மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் நாட்டுக்கும், சிரியா, ஜோர்டான் ஆகிய
மேலும்