img
img

நடிகரை திருமணம் செய்வேனா?- ஜனனி சஸ்பென்ஸ்
வெள்ளி 15 ஜூலை 2016 13:05:15

img

தமிழில் இடைவெளி? நான் நடித்த ‘அவன்-இவன்’, ‘பாகன்’, ‘தெகிடி’ படங்கள் ரிலீசான நேரத்தில், மலையாள வாய்ப்புகள் வந்தன. அங்கு ஆறேழு படங்களில் நடித்தேன். தமிழில் இடைவெளி விட்டது. அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் வைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இதனால், தமிழ், மலையாளம் இரண்டு மொழியிலுமே கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இப்போது மலையாளத்தில் படம் ஒப்புக்கொள்ளவில்லை. பாலிவுட் வாய்ப்பு வந்ததே..? இந்தி மற்றும் தெலுங்கு, கன்னடவாய்ப்புகள் வந்தது. முதல் படம் சரியாக இருந்தால்தான், தொடர்ந்து படங்கள் கிடைத்து ஜெயிக்க முடியும். ஆரம்பமே கோணல் என்றால், பிறகு எப்போதுமே ஜெயிக்க முடியாது. சரியான வாய்ப்பு அமையும்போது, கண்டிப்பாக எல்லா மொழிப் படங்களிலும் நடிப்பேன். எல்லோரும் கிளாமருக்கு மாறிவிட்டார்கள்...நான் மட்டும் ஏன் இன்னும் மாறவில்லை என்கிறீர்களா? நடிக்க வந்த புதிதில் என்ன கொள்கை வைத்திருந்தேனோ, அதுதான் இப்போதும். என் உடல்வாகுக்கு கிளாமர் செட்டாகாது. நடிப்புத் திறமையுள்ள கேரக்டர்களை மட்டுமே எதிர்பார்க்கிறேன். புதிய ஹீரோயின்கள் பற்றி? திறமைசாலிகளும், அழகான இளம் நடிகைகளும் தினந்தோறும் அறிமுகமாகிறார்கள். அதில் யார் நிலைக்கிறார் என்பதுதான் முக்கியம். இப்போதுள்ளநடிகைகளில் எனக்கு பிடித்தவர்கள் கீர்த்தி சுரேஷ், ரித்திகா சிங். கிசுகிசு வருவதில்லையே? நல்லதுதானே. இதற்குமுன், அதர்வாவுடன் இணைத்து எழுதினார்கள். நாளடைவில் அது பொய் என்று தெரிந்துவிட்டது. யாரோ, எதற்காகவோ இப்படியொரு வதந்தியைப் பரப்பினார்கள். அவர்கள்எண்ணம் பலிக்கவில்லை. காதலிக்கவில்லையா? காதலிப்பதும், கல்யாணம் செய்துகொள்வதும் நம் கையில் இல்லை. இப்போது யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவில் ஓரிரு நண்பர்கள் உண்டு. ஆனால், நட்பையும், சினிமா வாழ்க்கையையும் போட்டுகுழப்பிக்கொள்ளக் கூடாது. நடிகரை திருமணம் செய்வீர்களா? நடப்பது எதுவும் நம் கையில் இல்லை. காதல் என்பது எனக்கே தெரியாமல்வரலாம். அது எப்போது வரும்? எப்படி வரும்? யாருடன் வரும் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. காதலிப்பதும், கல்யாணம் செய்துகொள்வதும் தவறான விஷயம் இல்லை. சினிமா துறையில் இருப்பவரை திருமணம் செய்வேனா என்பதை இப்போது சொல்ல முடியாது. என்ன நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ, அதை, அதன் பாதையிலேயே விட்டு விடுவேன்.

பின்செல்

img
நான் 2 புள்ளைகளுக்கு அம்மா, என்னை விட்டுடுங்க

இயக்குனரிடம் கூறிய பிரபல நடிகை

மேலும்
img
நான் செக்ஸ் தொல்லைகளை சந்தித்தேன்

இக்கட்டான நேரத்தில் எனது பெற்றோர்கள் ஆறுதலாக இருந்தார்கள்.

மேலும்
img
ஐஸ்வர்யாராய், அபிஷேக் ஜோடி பிரிகிறது

மொத்த பாலிவுட்டும் சேர்ந்து போராடியும் கூட பிரிவைத் தடுக்க முடிய வில்லை

மேலும்
img
நடிகரை திருமணம் செய்வேனா?- ஜனனி சஸ்பென்ஸ்

பாலாவின் ‘அவன்-இவன்’ படத்தின் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இப்போது, ஐயரை

மேலும்
img
மகளுக்காக வாய்ப்பு கேட்கும் தாய்க்குலம்!

நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருக்கும் மூன்றெழுத்து நம்பர் நடிகைக்கு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img