ஸ்ரீகர விமானத்தின் கீழ், கிழக்கே தலை சாய்த்து சயனத் திருக்கோலத்தில் இடது கையை உயர்த்தி விரல் நுனிகளைப் பார்ப்பது போல் சேவை சாதிக்கிறார் பெருமாள். கோளூர்வல்லி தாயார் என்ற தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். நம்மாழ்வார் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்த தலம் இதுவாகும். இந்த ஆலயம் கிரகங்களில், மங்கலம் என்று வழங்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு உரியதாக விளங்குகிறது. ஒன்பது வகையான நவ நிதியங்களுக்கும், எண்ணிலடங்கா பெரும் செல்வத்துக்கும் அதிபதியாக திகழ்பவன் குபேரன். அவன் அளகாபுரி என்ற இடத்தில் தனது இருப்பிடத்தை அமைத்து வாழ்ந்து வந்தான். குபேரன் சிறந்த சிவ பக்தன் ஆவான். ஒரு சமயம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் சென்றான். அந்த அழகிய பொழுதில் சிவனும் பார்வதியும் குபேரனுக்கு ஒரு சேரக் காட்சி தந்தனர். மிகுந்த பக்திப் பெருக்குடன் சிவனைக் காணச் சென்ற குபேரன், தன் தாய் போன்ற பார்வதி தேவியை தீய எண்ணத்துடன் நோக்கினான். அச்செயலால் மனம் வெறுப்புற்ற பார்வதி தேவி, குபேரன் மீது கடும் கோபம் கொண்டாள். உடன் ஒரு கண்ணை இழக்கவும், அருவருப்பான உருவத்தைப் பெறவும், நவநிதியம் முழுவதும் இழக்கவும் சாபம் இட்டாள். நல்லோர் சாபம் உடனே பலிக்கும் என்பது போல அவை அனைத்தும் உடனே நிகழ்ந்தன. பொருப்பாளனை இழந்த நவ நிதியங்களும், தாம் தஞ்சம் அடைவதற்கான இடம் தேடின.
ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.
மேலும்பிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ
மேலும்பக்தர்கள் படையெடுக்கும் திருத்தலமாக மாறியது ஸ்ரீ செல்வ விநாயகர்.
மேலும்ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ...
மேலும்