img
img

‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை?
புதன் 15 ஜூன் 2016 14:34:02

img

“ஹேர் கலரிங்’ என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன. “ஹேர் கலரிங்’ வகைகள்: ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது. நிரந்தர ஹேர் கலரிங் செய்வதற்காக ஜெல் மற்றும் பிற பொருட்கள் ஆகியவையும், தற்காலிக மற்றும் குறிப்பிட்ட காலம் நிரந்தரமாக இருக்கும் செமி-பெர்மனன்ட் கலரிங் செய்வதற்காக, மஸ்காரா, கிரேயான்ஸ் மற்றும் வண்ண கூந்தல் ஸ்பிரேக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கூந்தலின் நீளத்தை பொறுத்து, அதற்கு ஹேர் கலரிங் செய்வதற்கான செலவும் ஏற்படும். குட்டையான மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு, “ஹேர் கலரிங்’ செய்தால், மிக அழகாக தோற்றமளிக்கும். “ஹேர் கலரிங்’ செய்பவர்கள், நிரந்தமாக செய்து கொள்வதா அல்லது தற்காலிகமாக செய்து கொள்வதா என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நரை முடியை மறைப்பதற்காக ஹேர் கலரிங் செய்ய விரும்புபவர்கள், நிரந்தமான ஹேர் கலரிங் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், ஒட்டுமொத்த கூந்தலையும் ஹேர் கலரிங் செய்து கொள்ளுவதா அல்லது ஹைலைட் மட்டும் செய்து கொள்ளுவதா என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஹேர் கலரிங் முறைகள்: ஹைலைட்டிங், ஸ்ட்ரீக்கிங், பிராஸ்டிங், பிங்கர் பெயின்டிங் ஆகியவை ஹேர் கலரிங் செய்யப்படும் பல்வேறு முறைகள். ஆனால், இன்றைய நவீன இளைஞர்கள் பொதுவாக, ஹை லைட்டிங் மற்றும் ஸ்ட்ரீக் கிங் ஆகியவற்றையே விரும்புகின்றனர். கூந்தல் பல பாகங்களாக பிரிக் கப்பட்டு வண்ணங்கள் பூசப்படுவதற்கு “ஹைலைட்டிங்’ என்று பெயர். பிரவுன் மற்றும் கோல்டன் நிறங்கள், மாநிற சருமத்தினருக்கும் சிவப்பு நிறம், நல்ல வெண்மையான சருமத்தினருக்கும் பொருத்தமாக இருக்கும் என, நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பின்செல்

அழகு குறிப்பு

img
தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை, செம்பருத்தி

நலம்தரும் நாட்டு மருத்துவத்தில் தலைமுடிக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடிய

மேலும்
img
அழகான பாதத்திற்கு...

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும்

மேலும்
img
‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை?

“ஹேர் கலரிங்’ என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக

மேலும்
img
கேமரன்மலையில் காடுகள் அழிக்கப்படுவதை பழனி தடுத்து நிறுத்தாதது ஏன்? - அமைச்சர் ஜூனாய்டி கேள்வி

கேமரன்மலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு அப்போது அமைச்சராக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img