கோலாலம்பூர், மே 30- கேமரன்மலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு அப்போது அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ பழனிவேல் ஒன்றுமே செய்யவில்லை என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜப்பார் சாடினார். பழனிவேல் அரசாங்கத்தில் இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் வான் ஜூனாய்டி குறிப்பிட்டார். பழனி, கேமரன்மலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல. இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவியில் இருந்தவர். எனவே தனது சொந்த தொகுதியில் அதுவும் தனது அமைச்சின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு விவகாரத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி எவ்வளவோ செய்து இருக்க முடியும். தன்னைவிட பழனிதான் அந்த அமைச்சில் அதிக காலம் இருந்தவர். எனவே நான் ஒன்றுமே செய்யவில்லை என்று பழனி என் மீது கண்மூடித்தனமாக குற்றச்சாட்டை கூற வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். கேமரன்மலையில் காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது என்பது சிரமமான காரியமாகும். காரணம், இந்த காடுகள் அழிப்பில் பின்னணியில் செல்வாக்குப் படைத்த சில தனிநபர்கள் இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை பழனி குற்றஞ்சாட்டினார். அது குறித்து கருத்துரைக்கையில் வான் ஜூனாய்டி மேற்கண்டவாறு கூறினார்.
நலம்தரும் நாட்டு மருத்துவத்தில் தலைமுடிக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடிய
மேலும்“ஹேர் கலரிங்’ என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக
மேலும்கேமரன்மலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு அப்போது அமைச்சராக
மேலும்