img
img

ஆண்மைக்குறைவு ... குழந்தையின்மை -Part -2
சனி 11 மார்ச் 2017 18:27:18

img

ஒரு டெஸ்ட் டியூபில் பெண்களின் கருமுட்டைகளில் உயிரணுக்களை செலுத்தி எம்ரியோஸ்கோப்பி கருவியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. கருவும்உயிரணுவும் இணைந்து எம்ரியோக்கள் உருவான பிறகு மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாளில் எம்ரியோ மனை வியின் உடலில் செலுத்தப்படுகிறது. ஐ.வி.எஃப் முறையிலும் ஒரே சுழற்சியில் வெற்றிகரமாக குழந்தை பிறந்துவிடும் என சொல்ல முடியாது. இரண்டு மூன்று சுழற்சிகள் கூட தேவைப்படலாம். இம்முறையிலான சிகிச்சையில் 45 -55 % வரை குழந்தை பிறக்கிறது. சில சமயங்களில் கணவர் ஆரோக்கியமாக இருந்து மனைவியின் சினைப்பையில் கோளாறு, கரு முட்டை எடுக்க முடியாத நிலை, ஆன்டி முலேரியன் ஹார்மோன் மிக குறைவாக இருக்கும் சூழ்நிலை போன்றவற்றில் இன்னொரு பெண்ணிடம் இருந்து கருமுட்டையைத் தானமாக பெற்று, கணவரின் உயிரணுவைச் சேர்த்து டெஸ்ட் டியூப் மூலம் எம்ரியோ உருவாக்கி மனைவியின் கர்ப்பப்பையில் வைத்துவிடலாம். இதற்கு 'டோனர் ஊசைட் ப்ரோக்ராம்' எனச்சொல்வார்கள். பொதுவாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் பெரிய அளவில் கோளாறு இருந்தாலோ, கர்ப்பப்பை சரியாக வளர்ச்சி அடையவில்லை என்றாலோ, அந்த பெண்ணால் கர்ப்பிணியாக முடியாது என்பதே நிதர்சனம். ஆனால் பல பெண்கள் இதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இருப்பதில்லை. கருத்தரிப்பு மையங்கள் கர்ப்பப்பை சரி யில்லை எனில் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்பதை வெளிப்படையாக சொல்லித்தான் ஆகவேண்டும், கர்ப்பப்பை சரி இல்லாத பெண்களுக்காக உருவான முறை தான் சர்ரோகசி என சொல்லப்படும் 'வாடகைத்தாய்' முறை. கணவரின் உயிரணு மற்றும் மனைவியின் முட்டை அல்லது கருமுட்டையைத் தானமாக பெற்று டெஸ்ட் டியூப் முறையில் எம்ரியொ உருவாக்கி இன்னொரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து கருவை வளரவைப்பதே வாடகைத்தாய் முறை. கணவர், மனைவி இருவருக்கும் பிரச்னை எனில் உயிரணு மற்றும் கருமுட்டை இரண்டையும் தானமாகப் பெற்றும் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற வழி இருக்கிறது" என குழந்தைப்பேறுக்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கமாகச்சொன்ன டாக்டர் தாட்சாயினி, "தாமதமாக திருமணம் செய்வது, குழந்தையை தள்ளிப்போடுவது போன்றவையும் இன்பெர்டிலிட்டி வருவதற்கு முக்கிய காரணங்கள். பொதுவாக பெண்கள் கருத்தரிப்பதற்கு 20 - 30 சிறந்த வயது" என்றார். குழந்தையின்மைக்கான காரணங்கள் குறித்து மூத்த பாலியல் மருத்துவரான டாக்டர் நாராயண ரெட்டி: "முதலில் ஆண்கள், பெண்கள் இருவருமே நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரையில் எவ்வளவு உயிரணுக்கள் இருக்கின்றன என்பதும், உயிரணுவின் அவையமைப்பு, உயிரணு வின் இயக்கம் ஆகிய மூன்றும் முக்கியம். பிறவிக்குறைபாடு, கதிர்வீச்சு மிகுந்த இடங்கள், அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் வேலை செய்வது போன்றவை உயிரணுக்களைப் பாதிக்கலாம். ஆணுறுப்பு பகுதிகளில் ஏற்படும் தொற்றுகள் போன்றவை ஆண்களைப் பாதிக்கும் காரணிகள். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை கர்ப்பப்பைக்கு வர வேண்டும். கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கருமுட்டை வரும் சமயங்களில் உறவில் ஈடுபடவேண்டும். பெண்களுக்கு கருக்குழாயில் எதாவது பிரச்னை ஏற்பட்டால் அடைப்பு ஏற்பட்டு கரு உருவாகாது. சினைப்பை நீர்க்கட்டிகள், ஹார்மோன் பிரச்னைகள், ஜனன உறுப்பு சுத்தமின்மை போன்றவற்றால் பொதுவாக கரு உருவாவதில்லை. ஒரு சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், காசநோய், சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் ஏற்பட்டாலும் கரு உருவாகாமல் போகலாம். இவை மட்டுமின்றி வேறு சில காரணங்களாலும் கரு உண்டாகாமல் போகலாம். திருமணம் செய்வதன் நோக்கமே ஆணும், பெண்ணும் இணைந்து உடல் சுகத்தை அனுபவித்து, ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக சந்தோஷமாக நீண்டகாலம் வாழ வேண்டும் என்பதுதான். குழந்தைப்பேறு என்பது திருமணத்தின் ஒரு பகுதி மட்டும் தான். வெறுமனே குழந்தை பெற்றுக் கொள்ள திருமணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நவீன சிகிச்சை முறைகளில் இணையுடன் உறவில் ஈடுபடாமலே குழந்தை பெற்று கொள்ள முடியும். எனவே திருமணம் எனும் பந்தத்தை உணர்ந்து முதலில் சந்தோஷமாக இருக்க வேண்டும். குழந்தைக்காக எதிர்பார்த்து மட்டும் இணையுடன் சேரக்கூடாது. ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பதே ஒரு விபத்துதான் . ஏனெனில் எந்த சமயத்தில் ஒரு பெண் கர்ப்பம் தரிப்பார் என யாராலும் கணிக்க முடியாது. ஆணுக்கு ஆண்மை, பெண்ணுக்கு பெண்மை என்பது குழந்தைப் பெறுவதை மட்டும் வைத்துச் சொல்லமுடியாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். முப்பது வயதுக்குள் இருப்ப வர்கள் திருமணமான உடனே குழந்தை உருவாக வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறு. திருமணம் ஆகி சந்தோ ஷமாக இருந்தும் ஒரு வருடம் கழித்தும் குழந்தை இல்லை என்றால் மருத்துவமனைக்கு வரலாம். முப்பது வயதைத் தாண்டியவர்கள் ஆறு மாதத்துக்குப் பின்னர் மருத்துவரைச் சந்திக்கலாம். திருமணம் ஆவதற்கு முன்னரே தனக்கு குழந்தைப் பேறு கிடைக்காதோ, தான் தகுதியற்றவனோ என்பது போன்ற எதிர் மறை எண்ணங்களைத் தவிருங்கள். உங்களுக்கு பாலியல் தொடர்பான சந்தேகங்கள் ஏற்பட்டால் அதற்கான சரியான விடைகளை மருத்துவர்களைச் சந்தித்து தெரிந்து கொள்ளுங்கள். மன அழுத்தமும், தவறான வாழ் வியல் முறையுமே குழந்தைப்பேறின்மை பிரச்னைக்கு காரணம். மனம் விட்டுப் பேசினாலே பாதி கோளாறுகள் சரியாகிவிடும் என தெளிவாக விளக்கிய டாக்டர் நாராயண ரெட்டி குழந்தைப்பேறுக்கு சில வழிகளையும் சொன்னார். குழந்தைப்பேறு பிரச்னை தவிர்க்கும் வழிகள்... 1. சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும், 2. நன்றாக உறங்க வேண்டும் 3.காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவுகளைச் சாப்பிடவேண்டும். 4. மன அழுத்தத்தை தவிர்க்கவும். 5. சிகரெட், மதுப்பழக்கத்துக்குத் தடை போடுங்கள். 6. நல்ல சுற்றுப்புறச்சூழலை உருவாக்க முயற்சி செய்யுங்கள். 7. ஃபாஸ்ட் புட் முதலான குப்பை உணவுகளை தவிர்க்கவும். 8. ஜனன உறுப்புகளை சுத்தமாக வைத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் 9. தேவையற்ற பயமோ, பதற்றமோ நிச்சயம் வேண்டாம். எந்த சந்தேகம் இருந்தாலும் ரகசியமாக தவறான தீர்வை நாடாமல், நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுங்கள் என்றார். நன்றி: விகடன்

பின்செல்

மகளிர்

img
சாதனைப் பெண் வைஷ்ணவிக்குப் பின்னால் இத்தனை துயரங்களா?

உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது”

மேலும்
img
பெண்களே! உங்கள் முடிவு உங்கள் தலைவிதியை மாற்றும். : சாதனைப் பெண் ஜெயலதா

ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்

மேலும்
img
சிவராத்திரியை முன்னிட்டு,10,000 நடனக் கலைஞர்கள் ஒன்றாக பங்கேற்று கின்னஸ் சாதனை

உலகம் முழுவது மிருந்து பல நாடுகளைச் சேர்ந்த

மேலும்
img
நெகிரி இந்து சங்க மகளிருக்கு சிகை அலங்கார, முக ஒப்பனைப் பயிற்சி

குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்

மேலும்
img
வியாபாரத்தில் சாதிக்கத் துடிக்கும் மலேசியப் பெண்கள் வரிசையில் விநோதினி!

அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img