img
img

ஆண்மைக்குறைவு ... குழந்தையின்மை ... கருத்தரிப்பு மையங்களில் நடப்பது என்ன?
சனி 11 மார்ச் 2017 17:34:19

img

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உலகெங்கும் பெருகி வருகிறது. உலகமயமாக்கலுக்கு பிறகான வாழ்வியல் முறை மாற்றங்கள் காரணமாக, மக்களிடம் கருத்தரிப்பு பிரச்னை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு தொழில் அதிபர்கள்கூட கருத்தரிப்பு மையங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டனர். குழந்தையின்மையால் ஏக்கத்திலேயே வாழ்நாளைக் கழிக்கும் தம்பதிகளுக்கு அறிவியல் தந்த வரப்பிரசாதம்தான் செயற்கைக் கருத்தரிப்பு முறை. ஆனால் இதை முழுக்க முழுக்க வணிக நோக்கில் மட்டுமே இன்னொரு தளத்துக்கு எடுத்துச்செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். பொதுவாக திருமணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லையென்றால் தான் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடுவார்கள் ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில், திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் கூட செயற்கை கருத்தரிப்பு மையங்களின் வாசலில் வந்து நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை குறித்த பிரச்னைகளுக்கு உரிய மருத்துவர்களை அணுகாமல், பல தவறான தகவல்களை அள்ளித்தரும் இரவு டிவி ஷோக்களை பார்த்ததும், இணையத்தில் தவறான தகவல்களைப் படித்தும், குழந்தையின்மை குறித்த தவறான புரிதல்களால் பயந்து போய் கருத்தரிப்பு மையங்களை நோக்கி ஓடுகிறார்கள். குழந்தைப்பேறுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பலர் செலவு செய்யத் தயாராக இருப்பதால், கருத்தரிப்பு மையங்களில் கனஜோராக வியாபாரம் நடக்கிறது. சிகிச்சைக்காக லட்சங்களில் பணம் பெரும் பல கருத்தரிப்பு மையங்கள் நேர்மையாக செயல்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டகால மாகவே இருக்கிறது. பல கருத்தரிப்பு மையங்களைப் பொறுத்தவரையில் அவர்களது மையங்களுக்கு வரும் தம்பதிகளுக்கு எப்படியாவது குழந்தை தங்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர், கருவைச் சுமக்கும் தாயின் உடல்நிலையை பற்றி சில மையங்கள் கவலைப்படுவதில்லை. குழந்தை தங்கவேண்டும் என்பதற்காக செலுத்தப்படும் ஹார்மோன் ஊசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து தெளிவாக சிகிச்சைக்கு வருபவர் க ளிடம் விளக்குவதே கிடையாது. தங்களது மையங்களுக்கு வந்தால் 100% குழந்தை பிறக்கும் என உத்திரவாதம் தந்தால் மட்டுமே தொழிலில் போட்டி யாளர்களை சமாளித்து காலூன்றமுடியும் என்பதால் எப்படியாவது குழந்தையை உருவாக்கிவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் செயற்கை கருத்தரிப்பு மூலமாக எல்லோருக்கும் தீர்வு சொல்ல முடியாது என்பதே அறிவியல் சொல்லும் எதார்த்தம். ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றால் அதை நேரடியாக பெரும்பாலான கருத்தரிப்பு மையங்கள் சொல்வது கிடையாது. அதேசமயம் சில தம்பதிகளும் தங்களுக்கு குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை, எப்படியாவது குழந்தைப் பெற்றுவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள். உலகம் முழுவதும் இருக்ககூடிய பிரச்னை இது. மிகவும் சிக்கலான உளவியல் ரீதியான பிரச்னையும் கூட. பணவசதி படைத்த பலர் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள, வறுமையில் வாடும் பெண்களைப் பயன்படுத்துவது வெளிப்படை. இந்தியா போன்ற நாடுகளில் வாடகைத்தாய் நடைமுறை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதை பயன்படுத்தி பிற நாட்டில் இருப்பவர்கள் ஏழைப் பெண்களை வாடகைத்தாயாக்கி பல புரோக்கர்களும், கருத்தரிப்பு மையங்களும் பல லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகின்றன. பல ஹார்மோன் ஊசி களை போட்டுக்கொண்டு, யாரோ ஒருவருக்காக குழந்தையை சுமந்து, உடலை உருக்கி செய்யும் வேலைக்கு, புரோக்கர்கள் பத்தில் ஒரு மடங்கு பணத்தை மட்டும் தந்து ஏமாற்றவும் செய்கிறார்கள். கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் முறைகேடுகள் வெளிப்படையாகத் தெரிவது கிடையாது. கருத்தரிப்பு மையங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற் கும், சிகிச்சை பெறுபவரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் கடுமையான சட்டங்கள் தேவை. சில ஃபெர்டிலிட்டி சென்டர்கள் பணத்துக்காக பல் வேறு அயோக்கியத்தனங்களைச் செய்வதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தம்பதிகள் சிகிச்சைக்கு வரும்போது கணவருக்கு விந்தணுக்கள் தரம் குறைவாக இருப்பதை கண்டுபிடித்தால் அவரிடம் இருந்து அதை வாங்கி பலப் படுத்துவாக சொல்கிறார்கள். இதற்கு சில ஆயிரங்கள் முதல் லட்சம் வரை கூட வசூலிக்கிறார்கள். தன்னிடம் குறைபாடு இருந்தாலும் தனது விந்துவில் இருந்து வாரிசு உருவாகும் வாய்ப்பு இருப்பதால் கணக்கு பார்க்காமல் செலவு செய்கிறார்கள். ஆனால் அதை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டு ஏற்கனவே விந்து தானம் செய்த மற்றொருவரின் விந்தணுவை எடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு செலுத்திவிடுவதாக சர்ச்சைகள் எழுகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மையக்கருவாக கொண்டு மேலோட்டமான முறையில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது, கருத்தரிப்பு மையங்கள் செல்வதே ஆபத்து என இக்கட்டுரை மூலம் பயமுறுத்த முயலவில்லை. கருத்தரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று ஆரோக்கிய மான குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். கருத்தரிப்பு மையங்கள் தான் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் வசந் தம் தந்துள்ளது.ஆனால் கருத்தரிப்பு மையம் என்பது ஒரு வியாபாரமாக மாறும்போது, மக்கள் விழிப்புடன் இல்லாத பட்சத்தில் கருத்தரிப்பு மையங்க ளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதற்கும், சிகிச்சை பெறுபவர்கள் ஏமாற்றப்படவும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. குழந்தையின்மை சிகிச்சைகள் பற்றி விரிவாக மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் தாட்சாயினியின் கருத்து இதோ: "பொதுவாக ஆணிடமோ, பெண்ணிடமோ உடல் ரீதியாக எதாவது பிரச்னை இருந்து அதனால் குழந்தை பிறக்கவில்லை என்றால் மட்டுமே சிகிச்சை தரப் படுகிறது. ஆனால் கருத்தரிப்பு மையங்களுக்கு வருபவர்களில் சுமார் 40 % பேருக்கு வேலைப்பளு, மன அழுத்தம், உடலில் ஏதாவது சிறு பிரச்னைகள், தம்பதிகளுக்கு இடையே புரிதலின்மை போன்றவற்றின் காரணமாகவே தாம்பத்திய வாழ்வில் இருந்து குழந்தை பிறப்பதில்லை. கவுன்சலிங் மற்றும் சில சாதரணமான சிகிச்சைகள் மூலமாக இயற்கையான முறையிலேயே இவர்களுக்கு குழந்தை பிறந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். ஆண்களுக்கு உயிரணுக் களின் எண்ணிக்கை, அவற்றின் வடிவம் (Morphology) நகரும் திறன் (mobility) ஆகியவை மிக முக்கியம். சிலருக்கு உயிரணுக்கள் உற்பத்தியே இல்லா மல் இருக்கலாம், சிலருக்கு உற்பத்தி இருந்தாலும் சில தடைகள் காரணமாக வெளியே வருவதில் சிக்கல் இருக்கலாம். பெண்களைப் பொறுத்தவரையில் கருக்குழாய்கள்( fallopian tube) ஒழுங்காக வளராமல் இருந்தாலோ, அவற்றில் ஏதேனும் தடை இருந்தாலோ, கருக் குழாய் பிறவிக்குறைபாடுகளால் பாதிக்கபட்டிருந்தாலோ பிரச்னை தான். இது தவிர பெண்களின் சினைப்பையில் ஏதேனும் கோளாறுகள், பிசிஓடி எனச் சொல்லப்படும் சினைப்பை நீர் கட்டிகள் பிரச்னை இருந்தால் குழந்தைப்பேறு அடைவதில் சிக்கல் ஏற்படலாம். கர்ப்பப்பை ஒழுங்கான வடிவத்தில் வளராமல் நின்று போய்விட்டாலோ, மிகச்சிறியதாக இருந்தாலோ, கர்ப்பப்பையில் தொற்று காணப்பட்டாலோ, கர்ப்பபையில் காசநோய் ஆகியவை இருந்தால் கரு உருவாகாத நிலை ஏற்படலாம். இது மட்டுமின்றி ஒரு சிலருக்கு உடலில் இதுபோன்ற எந்த பிரச்னைகள் இருந்தாலும் தாம்பத்ய வாழ்கை மூலம் குழந்தை பெற முடியாத நிலையும் இருக்கிறது. பல முறை தாம்பத்யம் மூலம் முயற்சித்தும் குழந்தை பெற முடியவில்லை எனில் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்தால் மட்டுமே தீர்வை நோக்கி நகரமுடியும். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் கரு முட்டை வெளியாகும் சமயங்களில் பரிசோதனை செய்ய வேண்டும். பெண் மருத்துவர் நேரடி பரிசோதனை செய்த பின்னர், ரத்தப் பரிசோதனை மூலமாக ரத்தசோகை, தைராய்டு மற்றும் சில ஹார் மோன்கள் பரிசோதனை செய்ய வேண்டும், ஏ.எம்.ஹெச் (AMH) எனச் சொல்லப்படும் ஆன்டி முலேரியன் ஹார்மோன் பெண்களுக்கு மிகவும் முக்கியம். இதன் அளவுகள் நான்கு முதல் ஆறுக்குள் இருந்தால் நல்லது. இரண்டுக்கு கீழ் குறைந்துவிட்டால் சிக்கல் ஏற்படக்கூடும். இது மட்டுமின்றி கர்ப்பை மற் றும் கருக்குழாய்களையும் பிரத்யேக ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரையில் ரத்த சோகை, சர்க்கரை அளவு கள் நார்மலாக இருக்கிறதா போன்றவை பரிசோதிக்க வேண்டும். எப்.எஸ் ஹெச் (FSH) ஹார்மோன் சரியான அளவில் உள்ளதா, தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துவிட்டு ஆண் மருத்துவர் முன்னிலையில் நேரடி பரிசோதனையும் செய்ய வேண்டும். மிகமுக்கியமாக ஆண் களின் உயிரணுக்கள் பரிசோதனை செய்ய வேண்டும். இதுபோன்ற பரிசோதனைகளை செய்தால் மட்டுமே யாருக்கு என்ன பிரச்னை என்பதை சொல்ல முடியும். மேம்போக்காக எதையாவது கணித்து சிகிச்சை அளிக்ககூடாது. பரிசோதனை முடிவுகளைப் பொறுத்ததே என்ன தீர்வை நோக்கி நகரலாம் என மருத்துவர் முடிவெடுக்க முடியும். அவசியமின்றி ஒருவரை செயற்கைக் கருத்தரிப்பு முறைக்கு யாரும் வற்புறுத்தக்கூடாது. பொதுவாக சில மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல், மன அழுத்தம் தவிர்த்தல், பெண்களுக்கு கரு முட்டை வெளியாகும் சரியான நேரத்தில் உடலுறவு வைத்துகொள்வது போன்றவற்றின் மூலம் இயற்கையான முறையிலேயே கரு உருவாகும் வாய்ப்பு உள்ளதை தவிர்த்து விடக்கூடாது. இயற்கையான முறையில் வாய்ப்பே இல்லை என உணர்ந்தாலோ அல்லது தம்பதிகளில் யாருக்காவது பிரச்னை இருந்து இயற்கையான முறைக்கு கரு உருவாக வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலை வந்தாலோ மட்டுமே தம்பதிகள் விருப்பப்படும் பட்சத்தில் செயற்கை கருத்தரிப்பு முறையை நாடலாம். செயற்கை கருத்தரிப்பு முறையில் முதல் கட்டமே ஐ.யூ.ஐ (Intrauterine insemination -IUI) முறை தான். அதாவது ஆணின் உயிரணுவை எடுத்து நேரடி யாக பெண்களின் கர்ப்பப்பையில் செலுத்தும் தொழில்நுட்பம். ஒரு முட்டையும், ஒரு உயிரணுவும் இணைந்தாலே கரு உருவாக்கிவிடும். ஆண்களுக்கு கோடிக்கணக்கில் உயிரணுக்கள் இருக்கும். ஒரு ஆணுக்கு குறைந்தபட்சம் பதினைந்து மில்லியன் உயிரணுக்கள் இருப்பது அவசியம். அதற்கு கீழ் இருந்தால் இயற்கையான முறையில் குழந்தைப் பெறுவது மிகக்கடினம். 10 -15 மில்லியன் உயிரணுக்கள் இருப்பவர்களுக்கு ஐ.யூ.ஐ முறை ஏற்றது. ஆண்கள் நேரடியாக தங்களது விந்துவை கருத்தரிப்பு மையங்களில் உள்ள பிரத்யேக பாட்டிலில் சேகரிக்க வேண்டும். ஆண்டிராலாஜி பரிசோதனைக் கூடத்தில் சிறந்த உயிரணுக்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஒருவர் மூன்று மில்லி அளவுக்கு விந்துவை தந்தால், அதை சுத்தப்படுத்தி 0.6 மிலி அளவுக்கு உயிரணுக்களை தேர்ந்தெடுத்து, மனைவிக்கு கருமுட்டை வெளியாகும் சமயங்களில் உடலில் செலுத்திவிடுவார்கள். பொதுவாகப் பெண்களுக்கு ஒரு கருமுட்டை தான் மாதவிடாயில் வரும், ஐ.யூ.ஐ முறையில் பெண்களுக்கு சில மருந்துகள் கொடுக்கப்படுவதால் 2-3 முட்டைகள் உருவாகும். இதனால் கரு உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதேசமயம் இரட்டையர்கள் பிறப்பதற்கான வாய்ப்பும் அதிகரிப்பதை மறுக்க முடியாது. பொதுவாக ஒரு சுழற்சியிலேயே கூட பலருக்கு பாசிடிவ் ரிசல்ட் கிடைத்துவிடும். ஒரு சுழற்சியில் கரு உருவாகாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் மூன்று சுழற்சிகள் வரையாவது மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம். ஐ.யூ.ஐ சிகிச்சை முறையில் 15 -20% பேருக்கு குழந்தை பிறக்கிறது. ஐ.யூ.ஐ முறையில் பத்தில் மீதி ஏழெட்டு பேருக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்பதற்குத் தெளிவான மருத்துவ ரீதியிலான விளக்கங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஐ.யூ.ஐ சிகிச்சையில் இன்னொரு முறை உள்ளது. ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருக்கும் பட்சத்தில், தம்பதிகள் இருவரும் விரும்பினால் மட்டும் உயிரணு தானம் மூலமாக இதே சிகிச்சையை செய்யலாம். கல்லூரி இளைஞர்கள் போன்ற ஆரோக்கியமான ஆண்கள் பலர் உயிரணு தானம் செய்கிறார்கள். உயிரணு தானம் செய்பவர்களிடம் இருந்து அவர்களின் முகவரி, பெயர், தொடர்பு எண் போன்றவை பெறப்படாது. அனானிமஸ் என சொல்லப்படும் பெயரற்றவர் எனும் முறையில் தான் உயிரணுக்கள் பாட்டி லில் சேகரிக்கப்படும். அவரின் ரத்த வகை, கண் மற்றும் தலை முடி நிறம், உயரம் ஆகியவை மட் டும் குறிக்கப்பட்டிருக்கும். உயிரணு தானம் முறையில் சிகிச்சை பெறவிரும்புபவர்களுக்கு அவரின் கணவரின் உயரம், நிறம், ரத்த வகையோடு ஒத்துப்போகும் நிலையில் இருக்கக்கூடியதை உயிரணு தானம் வங்கியில் இருந்து பெறப்பட்டு மீண்டும் பரிசோதிக் கப்பட்டு தூய்மை செய்யப்பட்டு 'ஆக்டிவ் உயிரணுக்கள்' மனைவியின் உடலில் செலுத்தலாம். நடைமுறையில் இம்முறையில் குழந்தை பெறுவதற்கு எளிதில் சம்மதிக்க மாட் டார்கள் என்பதால் இத்திட்டம் சிக்கலானது. கணவர் மற்றும் மனைவி என இருவரின் முழு ஒப்புதலின் பேரில் மட்டுமே இந்த வகையில் கருத்தரிப்பு மையங்கள் சிகிச்சை தரவேண்டும் என கட்டுப்பாடு உண்டு. ஐ.வி.எஃப் முறை - IVF (டெஸ்ட் டியூப் பேபி) விந்தில் பத்து மில்லியனுக்கும் குறைவான உயிரணுக்கள் இருக்கும் ஆண்களுக்கும், சினைப்பை நன்றாக இருந்தும் கருக்குழாய் வளர்ச்சி சரியில்லாத பெண்களுக்கும் பலனளிப்பது இம்முறை தான். ஏனெனில் கருக்குழாய் வளர்ச்சி சரியாக இல்லையெனில், ஆணின் விந்தணு கருமுட்டையின் சேரும் வாய்ப்பு இருக்காது. இதனால் இயற்கையான பாலுறவு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது. ஒருவேளை பெண்ணுக்கு கருக்குழாய் நன்றாக இருந்து, ஆணின் விந்தணுவுக்கு பாயும் திறன் குறைவாக இருந்தாலும் குழந்தை பெறுவது கடினம். ஒரு விஷயம் இங்கே மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் பாலுறவு கொள்வதில் எந்தப் பிரச்னையும் கிடையாது. ஐ.வி.எஃப் முறையில் சிகிச்சை பெற முடிவெடுத்தால், பெண்களுக்கு ஹார்மோன் ஊசிகள் முதலான சிகிச்சை கொடுத்து சில முட்டைகள் வரை பெறப் பட்டு பாதுகாக்கப்படும். ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களிடம் இருந்து விந்து பெறப்பட்டு பல்வேறு பரிசோதனைகளுக்குப்பிறகு அதிலிருந்து நல்ல உயிரணுக் கள் மேம்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

பின்செல்

மகளிர்

img
சாதனைப் பெண் வைஷ்ணவிக்குப் பின்னால் இத்தனை துயரங்களா?

உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது”

மேலும்
img
பெண்களே! உங்கள் முடிவு உங்கள் தலைவிதியை மாற்றும். : சாதனைப் பெண் ஜெயலதா

ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்

மேலும்
img
சிவராத்திரியை முன்னிட்டு,10,000 நடனக் கலைஞர்கள் ஒன்றாக பங்கேற்று கின்னஸ் சாதனை

உலகம் முழுவது மிருந்து பல நாடுகளைச் சேர்ந்த

மேலும்
img
நெகிரி இந்து சங்க மகளிருக்கு சிகை அலங்கார, முக ஒப்பனைப் பயிற்சி

குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்

மேலும்
img
வியாபாரத்தில் சாதிக்கத் துடிக்கும் மலேசியப் பெண்கள் வரிசையில் விநோதினி!

அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img