தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு திட்டமிட்டு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுக் கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்கள் மீது இம்மாதிரியான துப்பாக்கிச் சூடுகள், திட்டமிட்டே நடத்தப்படுகிறது. நெடுவாசலில் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் வேளையில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக ஏன் இருக்கக் கூடாது? துப்பாக்கி சூடு நடத்தபட்டு இத்தனை நேரமாகியும் பிரதமர் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன்? கேரள மீனவர்கள் மீது இத்தாலி மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி அவர்கள் இறந்த போது எடுத்த நட வடிக்கையைக் கூட ஏன் இப்போது எடுக்கவில்லை? தமிழனின் ஓட்டு வேண்டு. ஆனால், அவன் உயிர் முக்கிய மில்லை என்றுதானே பிரதமர் நினைக்கிறார். பாகிஸ்தான் மீனவர்கள், இந்திய மீனவர்களை கொலை செய்திருந்தால், அமைதியாக இருந்திருப்பாரா? ஏன் தமிழனின் உயிரை மட்டும் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் துச்சமாக நினைக்கிறது மத்திய அரசு?. இவ்வாறு சீமான் சாடியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்