சென்னை, டிச. 15-
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சேகர்பாவுவிற்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் 34 பேர் ஏற்கெனவே உள்ள நிலையில் 35ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சூழலில் தமிழக அமைச்சர்கள் 10 பேரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. சிலருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறையும் சுற்றுலா துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்து முத்துச்சாமிக்கு கூடுதலாக சில துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு. அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், சீர்மரபினர் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், சுற்றுசூழல் துறையை தொடர்ந்து கவனிப்பார் அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு. அமைச்சர் ஆர். காந்திக்கு கைத்தறி, ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்