முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியை ஆதரிக்கும் செய்தி வாசிப்பாளர் பாத்திமாபு மற்றும் நடிகை லதா ஆகியோரை 'பத்தினி தெய்வங்கள்' என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளது பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மேடைகளில் மூன்றாந்தர பேச்சுகள் தவிர்க்கப் படுவது குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்கிற ரீதியில் அரசியல்வாதிகள் தங்களது பயணத்தை தொடருகின்றனர். அதிமுக சசிகலா அணி ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. அதில் சம்பத் கூறியுள்ளதாவது: முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் திட்டம் கழக ஆட்சியை கவிழ்ப்பது அல்லது மு.க.ஸ்டாலின் முதல்வராக துணை நிற்பது அதுவும் முடியாவிட்டால் தேர்தலுக்கு வழிகாணுவது; இந்த சதி திட்டத்திற்கு சப்பைக்கட்டு கட்ட இன்றைக்கு தகிடுதத்தம் செய்கிறார் தப்பாட்டம் ஆடுகிறார். பாத்திமா பாபு, லதா போன்ற பத்தினி தெய்வங்களின் ஆதரவும் அவருக்கு கிடைத்து விட்டது. ஆனால் பார்த்த முகங்களையே திரும்ப திரும்ப பார்த்து அரசு வீட்டில் இருந்துகொண்டு அரசியலில் காணாமல் போன ஆட்களையும் காலாவதியான தலைவர்களையும் சில தேவையற்ற வீட்டை கூட்டி வைத் துக் கொண்டு கும்மாளம் போடுகிறார். பன்னீர் செல்வத்துக்கு மானமும் மரியாதையும் இருக்குமானால் அரசு வீட்டை காலி செய்து விட்டு அரசைப் பற்றி பேச வேண்டும். அரசு வீட்டில் இருந்து கொண்டே ஆபத்தான விளையாட்டை விளையாடுவது ஆரோக்கியமானது அல்ல. இவ்வாறு நாஞ்சில் சம்பத் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத்தின் இத்தகைய நாரசமான விமர்சனங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களிடையே இத்தகைய பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்