எந்தத் துறையிலும் பெண் களாலும் சாதிக்க முடியும் என்ற உண்மையை மெய்ப்பிக்கும் வகையில், தேனிலிருந்து சவக் காரம் மற்றும் சத்துமிக்க தேனை தயாரித்து வருகிறார் இந்தியப் பெண்மணி ஆர்.ராதிகா என்பவர். தமது கணவர் பி.சரவணனுடன் இணைந்து சொந்த நிலத்தில் தேனீக்களை வளர்த்து, அதிலிருந்து கிடைக்கும் தேனைக் கொண்டு முகப் பொலிவுக்காக 3 வகை சவக்காரத்தை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த 3 வகையான சவக்காரம் முகத்திலுள்ள பழைய, புதிய கரும்புள்ளிகள், நிறமூட்டல் மற்றும் வடுக்கள், சரும நிவாரணியை வழங்கக்கூடிய தேன் சவர்க்காரம் இதுவாகும். 40 கிராம் எடையில் தயாரித்து வெளியிடப்பட்டு வரும் இப் பொருளை எந்தவொரு சந்தேகமு மின்றி பயன்படுத்த லாம் என உரி மையாளர் ஆர்.ராதிகா தெரிவித்தார். மேலும் உடல் சுகாதாரத் திற்கு ஏற்ற வகையில் போத்தலில் அடைக்கப்பட்டு வெளியிடப் பட்டு வரும் தேன் வகைகள் காய் ச்சல், சளி, வயிற்று வலி, மாத விடாய், சரும பிரச்சினை, தோல், கண், ஆண்மை, சீரான இரத்த ஓட்டம், உடலில் கொழுப்பு, சிறுநீர் பிரச்சினை, இருமல், இரத்த சுத்தம், புண், பல், இருதய பாதிப்பு தூக்கமின்மை, இரத்த அழுத்தம், இனிப்பு நீர், அதிக உடல் எடை, சரும அழகு உட்பட சுமார் 30 பிரச்சினைகளுக்கு இந்த அசல் தேன் மூலமாக நிவாரணி காண முடியும் என்றார். திறந்த வெளி பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்துறை பட்ட தாரியான ஆர்.ராதிகா, அரசாங் கமும், மலேசிய சுகாதார அமைச் சும் வழங்கிய பல பயிற்சி களில் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சியையும் பெற்றுள்ளார். மலேசிய விவசாய இலாகா, சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் சுகாதார முறைப்படி சுத்தமாகவும் தரமாக வும் தயாரிக்கப்படும் சர்வானி தேன் கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனையில் இருக்கும் முகப் பொலிவு சவக்காரம், நிவாரணி தேன் 100 விழுக்காடு அசல் மிக் கது. கெடா பாலிங், பகுதியில் தமது அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்.ராதிகாவின் தரமான பொருட்களை வாங்கி, விற்பனை செய்து கை நிறைய சம்பாதிக்க விருப்பம் கொண்டவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது”
மேலும்ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்
மேலும்உலகம் முழுவது மிருந்து பல நாடுகளைச் சேர்ந்த
மேலும்குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்
மேலும்அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்
மேலும்