அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களிடம் அப்போலோ மருத்துவமனையில் கையெழுத்து வாங்கியது யார்? என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் துக்கு, மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை, டெல்லி யில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றது ஏன். சசி கலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது, பொருளாளராக இருந்தவர் பன்னீர்செல்வம். அதை, அவரால் மறுக்க முடியுமா. பொதுக்குழுவில் சசி கலா நியமனத்துக்கான கோப்பில் பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கையெழுத்திட்டது ஏன்? குறிப்பாக, ஜெயலலிதாவின் மறைவுக்கு முன், சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டியது யார்? சட்டமன்ற உறுப்பினர்களிடம் அப்போலோ மருத்துவமனையில் கையெழுத்து வாங்கியது யார்? பொதுச்செயலாளர் இல்லை என்றால், அப்போது அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் என்ன செய்துகொண்டு இருந்தார்' என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்