நடிகர் ராதாரவி மாற்றுத் திறனாளி குழந்தைகள் மனம் புண்படும்படி மேடையில் பேசியதைக் கண்டித்து அவரது வீட்டை, மாற்றுத்திறனாளிகள் முற்றுகை யிட்டுள்ளனர். நடிகர் ராதாரவி அதிமுகவின் பேச்சாளராக இருந்தார். அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசுவதில் புகழ் பெற்றவர். அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் மதிமுக தலைவர் வைகோ ஆகியோரை மாற்றுத்திறனாளி குழந்தைகள் என்பது போல் நடித்துக் காண்பித்துப் பேசினார். அப்போது மேடையில் இருந்தவர்கள் அதனை ரசித்துக் கைதட்டினர். தற்போது அவருடைய இந்த மனிதம் இல்லாத பேச்சு பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. கனிமொழி தன் முகநூல் பக்க்த்தில் இதனைக் கண் டித்து எழுதியிருந்தார். இந்நிலையில், அவரது பேச்சால் மனம் புண்பட்ட மாற்றுத் திறனாளிகள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தை கைவிட வேண்டும் என போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். நடிகர் ராதாரவி தற்போது திமுக வில் இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்