இரண்டு வாரங்களுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரு கிறது. நேற்று, நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். சந்திப்புக்குப் பின், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கண்டிப்பாக அனுமதி அளிக்கப்படாது என்று முதல்வர் உறுதி அளித்தார்' என்று போராட்டக் குழுவினர் கூறினர். இந்நிலையில், நெடுவாசல் போராட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. புல்லன்விடுதியைச் சேர்ந்த கிராமத்து மக்கள் ஏர் கலப்பை, பயிர் மற்றும் பலாப்பழம் உள்ளிட்டவற்றை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், சுற்றுப்புற கிராமத்து மக்கள் பலரும் போராட்டக் களத்துக்கு தொடர்ந்து அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர். நேற்று, முதல்வர் வாய்மொழியாக அளித்த உறுதிமொழியை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் ஏற்கவில்லை. அதற்குப் பதிலாக, ஜல்லிக்கட் டுக்கு அறிவித்தது போல் உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மேலும், போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸ் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. காவல் துறையினர், 8 சுங்கச் சாவடிகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 33 இடங்களில் பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளனர். கைது நட வடிக்கைக்கு ஆயத்தமான பணிகள் இவை என்றும் தகவல்கள் கூறுகின்றன. முதல்வர் சந்திப்புக்குப் பிறகு போராட்டக் களம் பரபரப்பான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்