img
img

குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் வியாபாரத்தில் கால் பதிக்கும் மாலா!
புதன் 01 மார்ச் 2017 13:10:09

img

இந்திய சமூகத்தில் குறிப்பாக நமது சகோதரிகளிடையே தங்களுக்கென்று வியாபாரத்தை அமைத்துக்கொள்வது காலத்தின் கட்டாயம் என்னும் சிந்தனை ஆழமாக விதைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பலரும் வியாபாரத்துறையில் கால்பதித்து வருகின்றனர். ஆனால், அவர்களில் பெரும் பான்மையானோரின் முக்கிய தேர்வாக நமது பாரம்பரிய வியாபாரப் பொருட்களே உள்ளன. ஒரே மாதிரியான பொருட்களைப் பலர் வியாபாரம் செய்வதால் அதில் போட்டிகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலையைத் தவிர்க்க முடியாது.வழக்கத்திற்கு மாறாக, நம்மவர்கள் அதிகம் வியாபாரம் செய்யும் பொருட்களையோ துறையையோ தேர்ந்தெடுத்தால், நம்முடைய அடை யாளம் மிகவும் தனித்துவமாகத் தெரியும் என மாலா தெரிவித்தார். பேரா, ஈப்போவைச் சேர்ந்த மாலா, திருமணத்திற்குப் பிறகு கோலாலம்பூரில் குடியேறி உள்ளார். ஏற்கெனவே வியாபாரத்துறையில் உள்ள முன் அனுபவ மும் உறவினர் கொடுத்த ஆர்வமும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை வியாபாரம் செய்வதைத் தூண்டின. கோலாலம்பூரை எடுத்துக் கொண்டால், சௌக்கிட்டில் ஜாலான் ராஜா லாவுட்டில் மட்டும்தான் இத்தகைய விளையாட்டுப் பொருட்களைப் பெற முடியும். அந்தப் பகுதி முழுவதும் சீன சகோதரர்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளதை நாம் அறிவோம். நம்மவர்களுக்கும் வேறு வழியில்லாமல் அங்குத்தான் சென்று வாங்குகிறோம். அதனால், இந்தியர் அதிகம் வாழும் பகுதியில் இப்படி வித்தியாசமான வியாபாரத்தைத் தொடங்கினால் வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 7 மாதங்களாக பத்துமலை பகுதியில் ஆர்.என்.சாமி என்னும் பெயரில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்கும் கடையைத் திறந்து வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டு மின்றி, இன்றைய பெற்றோர்களின் குழந்தைகளைப் பற்றிய சிந்தனை யில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் வளர்ச்சிக்கேற்ற வகையில் அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுப் பொருட்களைத் தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். மேலும், இதில் நம்மவர்கள் அதிகம் வியாபாரம் செய்யாத காரணத்தால் இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து ஆதரவு கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வியாபாரத்தில் தோல்விகள் ஏற்படுவது மிகவும் இயல்பு. தோல்விகளைச் சந்தித்தால்தான் நம்முடைய அனுபவம் அதிகரிக்கும். அனுபவம் அதிகரிக்கும் போது குறிப்பிட்ட அந்த துறையில் அதிகமாகச் சாதிக்க முடியும். இதனை நம்முடைய மகளிர் தெளிவாகப் புரிந்துகொண்டால் எத்தகைய வியாபாரத் திலும் வெற்றி பெறலாம் என மாலா தெரிவித்தார்.

பின்செல்

மகளிர்

img
சாதனைப் பெண் வைஷ்ணவிக்குப் பின்னால் இத்தனை துயரங்களா?

உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது”

மேலும்
img
பெண்களே! உங்கள் முடிவு உங்கள் தலைவிதியை மாற்றும். : சாதனைப் பெண் ஜெயலதா

ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்

மேலும்
img
சிவராத்திரியை முன்னிட்டு,10,000 நடனக் கலைஞர்கள் ஒன்றாக பங்கேற்று கின்னஸ் சாதனை

உலகம் முழுவது மிருந்து பல நாடுகளைச் சேர்ந்த

மேலும்
img
நெகிரி இந்து சங்க மகளிருக்கு சிகை அலங்கார, முக ஒப்பனைப் பயிற்சி

குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்

மேலும்
img
வியாபாரத்தில் சாதிக்கத் துடிக்கும் மலேசியப் பெண்கள் வரிசையில் விநோதினி!

அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img