img
img

இரண்டு பொறுப்பு கேட்டு ஓபிஎஸ் அணியை தலைதெறிக்க ஓடவிட்ட தீபா!
புதன் 01 மார்ச் 2017 12:20:09

img

கட்சியா, இயக்கமா எது நடத்துவது, எப்படி நடத்துவது என தெரியாமல் அரசியல் களத்தில் கால்பதித்த தீபா கேட்ட இரண்டு பொறுப்புகள்தான் ஓபிஎஸ் அணியை இன்னமும் அதிர்ச்சியிலேயே உறைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒற்றை காரணத்துக்காக தலைவரை தேடும் அதிமுக தொண்டர்களில் ஒருபகுதியினர் தீபாவை ஆதரிக்கின்றனர். அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அணி விஸ்வரூபமெடுத்ததால் பெரும்பகுதி தொண்டர்கள் 'அங்கிட்டு' சாய்ந்துவிட்டனர். இதனிடையே திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்- தீபா சந்திப்பு நடைபெற்றது. தீபாவை வீட்டுக்கு அழைத்து ஆரத்தி எடுத்து வரவேற்றார் ஓபிஎஸ். அப்போது தாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என தீபா கூறியிருந்தார். ஆனால் திடீரென தனி வாத்தியம் வாசிக்கத் தொடங்கிவிட்டார் தீபா.இருந்தபோதும் ஓபிஎஸ் அணி, தீபா வருவார் என இன்னமும் நம்பிக்கையோடுதான் இருக்கிறது. இதனிடையே தீபா முன்வைத்த இரண்டு நிபந் தனைகள் குறித்துதான் ஓபிஎஸ் அணி இன்னமும் அதிர்ச்சியுடன் விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபிஎஸ் அணியில் தாம் இணைய வேண்டுமானால் தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும்; அதேபோல் அதிமுக பொதுச்செயலர் பதவியும் தமக்கு தரப்பட வேண்டும் என்று ஒரே போடாக போட்டாராம் தீபா. அரசியலில் 'அ'வை எழுத தொடங்கியிருக்கும் தீபாவுக்கு சசிகலாவைவிட பேராசை அதிகமாக இருக்கிறதே என அதிர்ந்து போனதாம் ஓபிஎஸ் அணி. இந்த நிபந்தனைகளை நாசூக்காக நிராகரித்துவிட்டது ஓபிஎஸ் அணி. இதனால்தான் தனியாக பேரவையை தொடங்கி பஞ்சாயத்துகளை எதிர்கொண்டு வருகிறாராம் தீபா.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img