img
img

“நம்ம குடும்பத்தில் ஒருவர் சி.எம் ஆகணும்!
செவ்வாய் 28 பிப்ரவரி 2017 13:06:06

img

‘‘தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளது’’ என்று சசிகலாவை விமர்சித்து வருகிறார்கள். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அவரை, ‘சிறைக்கு வெளியில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோல்’ எனக் கருதப்படும் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்தபோது நடந்தது என்ன? கடந்த 20-ம் தேதி மாலை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் வந்தனர். அவர்களை கர்நாடக மாநில அ.தி.மு.க செய லாளர் புகழேந்தி அழைத்து வந்தார். சிறை வளாகத்துக்குள் காத்திருந்த இளவரசியின் மகன் விவேக், அவரின் மனைவி கீர்த்தனா மற்றும் உறவி னர்களோடு இவர்கள் சிறைக்குள் சென்றார்கள். உள்ளே தினகரனும் சசிகலாவும் மட்டும் தனியாக நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். தினகரனுக்கு ஏராளமான அறிவுரைகள் சொல்லி இருக் கிறார் சசிகலா. அவரின் யோசனையைக் கேட்டே, துணைப் பொதுச்செயலாளராக தலைமைக்கழகத்துக்கு வந்து தினகரன் பொறுப்பேற்றுக்கொண்டு, பால்கனியில் நின்று போஸ் கொடுத்தார். ‘கட்சியில் இனி எல்லாமே நான்தான்’ என்று காட்டுவதற்காகவே இப்படி தினகரனை செய்யச் சொல்லி யிருக்கிறார்! ‘‘இப்போது இருக்கும் அரசியல் சூழலில் யாரையும் நம்பமுடியாது. நீ அறிமுகம் செய்து வைத்த பன்னீரே நம்மை பதம் பார்த்த மாதிரி, பழனிசாமியும் செய்ய மாட்டாரா என்ன? அவரின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டும். நீ கட்சி அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று நிர்வாகிகளை சந்தித்துப் பேச வேண்டும். அரசு நலத் திட்ட அறிவிப்புகளை நீ பார்த்துக் கொடுத்த பிறகே முதல்வர் வாசிக்க வேண்டும். எந்த விஷயத்திலும் நம்மை மீறி செயல் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று அப்போது சசிகலா அட்வைஸ் செய்தாராம். ‘‘நம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்றைக்கு முதல்வர் சீட்டில் உட்கார்கிறோமோ, அன்றைக்குதான் இந்தக் கட்சியும் ஆட்சியும் நம்முடையது என்று முழுமையாக நம்ப முடியும். அதுவரை எது வேண்டுமானாலும் நடக்கும். கவனமாக இரு” என்று சசிகலா எச்சரித்ததாகச் சொல்கிறார்கள். ‘‘தேவையில்லாமல் என்னை யாரும் பார்க்க வர வேண்டாம். எங்களைப் பார்த்துக்கொள்ள வக்கீல் செந்தில், அசோகன், மூர்த்தி ராவ் ஆகியோர் இங்கேயே தங்கி இருக்கிறார்கள். அது தவிர கர்நாடக அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி இருக்கிறார்” என்றும் சொல்லி இருக்கிறார் சசிகலா. தினகரன் வாங்கிவந்த பழங்கள், எனர்ஜி ஃபுட்ஸ் போன்றவற்றை இளவரசியிடம் கொடுத்தபோது, அவர் சலித்துக்கொண்டாராம். ‘‘தேவையில்லாமல் எதற்காக இதையெல்லாம் வாங்கி வருகிறீர்கள். மூன்று நாட்களுக்கு முன்பு வாங்கி வந்த பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. அதையெல்லாம் மற்ற கைதிகளுக்கு கொடுக்கச் சொல்லி பாதுகாவலர்களிடம்தான் கொடுக்கிறோம்’’ என்றாராம் அவர். உறவினர்கள் என்ற முறையில் இவர்கள் பார்த்தாலும், கட்சி நிர்வாகிகளால் சசிகலாவைப் பார்க்க முடியவில்லை. முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகிய மூன்று பேரும் ஒரே காரில் சிறைக்கு வந்தார்கள். இதேபோல தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் வந்தார்கள். ஆனால், சிறைத்துறை யாருக்கும் அனுமதி தரவில்லை. சிறைத்துறை விதிப்படி ஒரு தண்டனைக் கைதியை, வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சந்திக்க முடியும். அந்தச் சந்திப்பும் ஒரு மணி நேரத்துக்குள்ளானதாக இருக்க வேண்டும். ஆனால், சசிகலாவையும் இளவரசியையும் 16-ம் தேதியில் இருந்து தினந்தோறும் பத்துக்கும் மேற் பட்டவர்கள் சென்று சந்தித்து, குறைந்தது ஐந்து மணி நேரம் பேசிவிட்டு வருகிறார்கள். இதற்கு பல தரப்பினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்தே இந்த அனுமதி மறுப்பு’’ என்கிறார்கள். பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா வந்த நிமிடத்திலிருந்து, சயனைடு மல்லிகா என்கிற கேடி கெங்கம்மாள் செய்திகளில் பரபரப்பாக அடிபட்டார். சசிகலா அறைக்குப் பக்கத்து அறையில் இருந்தார் இவர். ஜெயலலிதாவின் தீவிர ரசிகையான இவர், தன்னிடம் ஏதாவது தகராறு செய்வார் என சசிகலா பயந்தார். இதையே காரணமாகக் காட்டி தமிழக சிறைக்கு மாற்ற, கோரிக்கை வைக்கலாம் என சசி தரப்பு நினைத்துக்கொண்டிருந்தது. ஆனால், தொடர்ந்து கன்னட, தமிழ் மீடியாக்களில் சயனைட் மல்லிகாவைப் பற்றி எழுதியதால், 21-ம் தேதி இரவு பெல்காம், ஹிண்டல்கா மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் மல்லிகா.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img