கல்லூரி மாணவியை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் யலகங்கா பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தவ ஹர்ஷா ராஜ் (15) க்கு சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருது பெற்ற அரை மணி நேரத்திற்குள் மதியம் சுமார் 3 மணிக்கு, ஹர்ஷா கத்தியால் குத்துப்பட்டு பள்ளி காம்பவுண்டுக்கு வெளியே உயிருக்கு போராடி துடித்துக்கொண்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஹர்ஷா அங்கு சுமார் 20 நிமிடங்களில் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், சுமார் பத்து மாணவர்கள் ஒருவருக் கொருவர் சத்தமாக சண்டை போட்டுக்கொண்டதை பார்த்தோம். திடீரென அந்த இடம் அமைதியானது. ஹர்ஷா ரத்த வெள்ளத்தில், துடித்துக்கொண் டிருந்தார் என்று கூறியுள்ளனர். கொலை செய்தவரும் மைனர் என்பதால் இந்த வழக்கை மிகவும் ஜாக்கிரதையாக கையாளுவதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த தாக்குதலில் இன்னொரு மாணவருக்கு காது கிழிந்துள்ளது. அவர் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்