சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வினரால் அரங்கேற்றப்பட்ட ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போர் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழக சட்டப்பேரவையில் 18-2-2017 அன்று ஆளும் அ.தி.மு.க.வினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தை, அவை மரபுகளுக்கு மாறாக, திட்டமிட்டு, காவல் துறை உயர் அதிகாரிகளை சட்டமன்றத்துக் குள் வரவழைத்து, பிரதான எதிர்க் கட்சியான தி.மு.கழக உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்தி, கூண்டோடு வெளியேற்றி விட்டு, சட்டப்பேரவை விதிகளுக்கு புறம்பாக நிறை வேற்றிய ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள கழக மாவட்டத் தலைநகரங்களில் 22-2-2017 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ‘‘உண்ணாவிரத அறப்போர்"" நடைபெறும். கழக சார்பு அணிகள் நிர்வாகிகள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒத்தக் கருத்துடைய அமைப்புகளும் - பொது மக்களும் பெருந்திரளாக பங்கேற்று, இந்த உண்ணா விரத அறப்போரினை வெற்றிபெறச் செய்யவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்