ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அறப்போர் செய்து பெற்ற வெற்றியை உலக சாதனையாக கொண்டாட உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நடிகர் ராகவாலாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு தடையை நீக்கியதை அடுத்து, அந்த சந்தோசத்தை வெற்றி விழாவாக மாணவர்கள், இளைஞர்களுடன் கொண்டாட எல்லோருக்கும் ஆசை. எனவே ஜல்லிகட்டு வெற்றியை இன்று (பிப்ரவரி 18) கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இன்று மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் உலகத்தமிழர்கள் அனைவரும் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ, உங்கள் அலை பேசியில் டார்ச் அடித்தோ அல்லது மெழுகுவர்த்தி ஏந்தியோ அமைதியாக கொண்டாடுவோம். மெரினாவில் பிரகாசித்த வெளிச்சம் மீண்டும் இன்று மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும் என்று கூறியிருந்தார். அதேநேரத்தில் நமது சந்தோசக்களம் மெரினாதான் என்றா லும், இன்றைய சூழலில் மெரினா சரியான இடமாக இருக்காது என்பதால் ஏதாவது ஒரு இடத்தில் ஒன்று கூடி மாணவர்கள், இளைஞர்களுடன் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்துள்ளதாக லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அறப்போர் செய்து பெற்ற வெற்றியை 1100 கிலோ கேக்கை வெட்டி உலக சாதனை நிகழ்த்தி கொண்டாட உள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். செஃப் வினோத் உள்ளிட்ட 40 செஃப்கள் உருவாக் கும் இந்த கேக் 50 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. செஃப் வினோத் உடன் இணைந்து லாரன்ஸ், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் இணைந்து இந்த உலக சாதனை படைக்கின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்