img
img

பெரும் பரபரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு...
சனி 18 பிப்ரவரி 2017 12:12:38

img

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஇன்று நம்பிக்கை கோரும் தீர் மானத்தை சட்டசபையில்தாக்கல் செய்து பேசினார். சட்டசபை கதவுகள் தற்போது மூடப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி தனக்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற கடிதத்தை ஆளுநரிடம் காட்டியதன் பேரிலேயே அவரது தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று சட்டசபையில் பெரும் பான்மை பலத்தை நிரூபிப்பதாக அறிவித் துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக இன்று காலை 11 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் கூடியது. இன்று சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது பேசினார். இதையடுத்து சட்டசபை கதவுகள் மூடப்பட்டு விட்டன. உள்ளே கடும் அமளி நிலவும் நிலையில் கதவுகளை மூடியிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img