சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கல்பாக்கம் அருகே கூவத்தூரில் கோல்டன் பே ரெசார்ட்டில் அதிமுக எம்எம்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தனக்கு 124 உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதாக கூறி நேற்று ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். (124 பேரில் மயிலாப்பூர் நடராஜ், எம்எல்ஏ பதவி போனாலும் பரவாயில்லை. மனசாட்சிப்படி வாக்களிப்பேன் என கூறியுள்ளார். நாகை அன்சாரி தனது முடிவை அறிவிக்கவில்லை.) எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சராக பதவியேற்றப்பின்னர் 15 நாட்களுக்குள் பெரும் பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோருவதற்காக சட்டப்பேரவை நாளை 18ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த நிலையில் கூவத்தூரில் கோல்டன் பே ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல் ஏக்களில் பெரும்பலானோரிடம் நடந்த குதிரை பேரம் முடிவுக்கு வந்துவிட்டது. 18 எம்எல் ஏக்கள் மட்டும் அதிருப்தி தெரிவித்ததால் நேற்று பதவியேற்புக்குக்கூட அவர்களை சென் னைக்கு அழைத்துவரவில்லை. பலத்த பாதுகாப்புடன் ரெசார்ட்டிலேயே வைத்திருந்தனர். அதிருப்தியடைந்துள்ள எம்எல்ஏக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் சமாதானத்துக்கு ஒத்துவரவில்லை என்பதால் கூடுதலாக கொடுப்பதாக குதிரைப்பேரம் நடத்தியுள்ளனர் அமைச்சர்கள். இந்த செய்திகள் வெளியானதும், ஏற்கனவே சம்மதித்த எம்எல்ஏக்கள் உடனே ஒப்புக் கொண்டதால் தங்களுக்கு குறைவாகவும், இழுத்தடித்து ஒப்புக்கொண்டால் அதிகமாகவும் தருவீர்களா என முரண்டு பிடித்துள்ளனர். குதிரைப்பேரத்துக்கு ஒப்புக்கொண்டு தற்போது முரண்டு பிடிப்பதால் அதிருப்தி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இதனால் சமரசத்தில் ஈடுபட்டன அமைச்சர்கள் குழப்பமடைந்து, துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனிடம் கூறியுள்ளனர். உடனே அவர், இந்த குழப்பத்தை நீக்கு மாறு தம்பிதுரையை அனுப்பியுள்ளார். உங்களால் முடியவில்லை என்றால் தான் வரு வதாகவும் கூறியுள்ளார் தினகரன்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்