மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் காவல்துறை இயக்குனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். கூவத்தூரில் உள்ள தனியார் ரெசார்ட்டில், தான் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தாகவும், தான் மாறு வேடத்தில் தப்பி வந்ததாகவும், அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் பலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவானவர்களாக உள்ளனர் என்று சரவணன் தெரிவித்திருந்தார். சரவணன் அளித்த புகாரின்பேரில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்பட 4 பேர் மீது கூவத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. முத்தரசி, வடக்குமண்டல ஐஜி செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த ரிசார்ட்டுக்குள் சென்றனர். அப்போது அமைச்சர்கள் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. எஸ்.பி. மற்றும் ஐஜியை பார்த்து அமைச்சர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் நடந்ததை யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு எடுத்துள்ளார். அப்போது எஸ்.பி.முத்தரவி பேசும்போது, எஸ்.பி.யை பார்த்து குப்பை பொறுக்க வந்தியா என கேட்குறாங்க. இப்படி பேசலாமா என கோபமடைந்தார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்றிலிருந்து போலீசுக்கு ஒத்துழைக்கிறது நான்தான். ஏன் கம்பு வச்சுகிட்டு வர்றீங்க என கேட்டேன் இது தப்பா என்றார். அதற்கு எஸ்.பி. முத்தரசி, நாங்க எங்கப்போனாலும் உடன் வர போலீஸ்காரங்க இப்படித்தான் வருவாங்க என்றார். தொடர்ந்து வாக்குவாதம் நீடித்தது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்