தமிழக அரசியல் குழப்பம் இரண்டு அல்லது மூன்று நாளில் முடிவுக்கு வரும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். சசிகலா உள்பட மூன்று பேருக்கு உச்சநீதிமன்றம் நேற்று சிறைத் தண்டனை அளித்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோரினார். இதையடுத்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர் மைத்ரேயன் எம்பி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர், அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆட்சியமைக்க யாரை முதலில் ஆளுநர் அழைப்பது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசியல் குழப்பம் இரண்டு அல்லது மூன்று நாளில் முடிவுக்கு வரும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ஆட்சியமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடலாம் என்றும், யாருக்கு பெரும்பான்மை உள்ளது என நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்