அ.தி.மு.க எம்.எல்.ஏ சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அ.தி.மு.க சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கூவத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் 130 பேரை காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். எட்டாவது நாளாக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் உள்ளனர். முன்னதாக, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் அங்கிருந்து தப்பி, முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், "என்னை சசிகலா அடைத்து வைத்திருந்தார். மாறுவேடத்தில் அங்கிருந்து தப்பி வந்தேன்" என்று கூறினார். இதனிடையே, அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தன்னை கடத்தி வைத்திருந்ததாக எம்.எல்.ஏ சரவணன், கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சசிகலா மற்றும் அதிமுக சட்டமன்றக் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்