தமிழக முதல்வராக பதவியேற்க சசிகலாவை ஆதரிப்பதாக 119 அதிமுக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக பதவி ஏற்க கனவு கண்டு வரும் நிலையில், அதற்கான அழைப்பை ஆளுநர் எப்போது விடுப்பார் என்று காத்திருக்கிறார். சசிகலா முதல்வராவது தொடர்பான வழக்கில் 119 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கூவத்தூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் 119 எம்எல்ஏக்கள் தங்கி இருப்பதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் எம்எல்ஏக்கள் அனைவரையும் நேரில் ஆஜர்படுத்த தயாராக இருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்களின் அணிவகுப்பை நடத்த முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீதிமன்றம் சட்ட ஆணையரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் பாலு கோரியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்