ஆணுக்கு கண்கள் வழியாகவும் பெண்ணுக்கு காதுகள் வழி யாகவும்தான் காதல் பெரும்பாலும் பிறக்கி றது என்பார்கள். ஆம். ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து அவள் அழகிலோ அல்லது வேறுசில காரணங்களாலோ மயங்கி காதலில் விழுகிறான். பெண்ணே, நீ அழகாக இருக்கிறாய், உன் டிரெஸ் கியூட்டா இருக்கு, நீ பேசினா கேட்டுக்கிட்டே இருக்கலாம். என்பதுபோல் அந்த ஆண் பேசுவதைக் கேட்டு காதலில் விழுகிறாள். இதனால் அவன் இயல்பு என்ன, தன்னால் அவன் அருகாமையில் நிம்மதி யாக இருக்க முடியுமா என்ற எந்த விஷயமும் தெரியாமல் வாய்ப்பேச் சில் வல்லவனான ஒருவனிடம் போய் விழுகிறார்கள் பல பெண்கள். இதனா லேயே பல பெண்கள் அந்த ஆணின் சுயம் தெரியாமல் ஏமாந்து போவதும் நடக்கிறது. வீட்டுக்கும் சமூகத்துக்கும் கட்டுப் பட்டவர்களாக பலகாலம் அடங்கியிருந்த காரணத்தினாலேயே எது சுதந்திரம், எது தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளக் கூடிய விஷயம் என்று வித்தியாசம் தெரியாமல் பலர் மயங்கி நடக்கிறார்கள். முன்பு ஆண்களிடம் மட்டுமே இருந்த காதல் துரோகங்கள், ஏமாற்றுத்தனம், ஒரே நேரத்தில் பலரைக் காதலிப்பது நிறைய பெண்களிடம் இருப்பதற்குக் காரணம், இந்த அதீத சுதந்திரம் என்ற மயக்கம்தான். சில பெண்கள், தன் காதலனுக்கு தன்னையே முழுமையாக கொடுப்பதுதான் காதலின் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும் என நினைத்து எல்லை மீறுகிறார்கள். பின்னர், அந்த சுகத்துக்கு பழகி வேண்டாத விளைவுகளைச் சந்திக்கிறார்கள். இரு தரப்பும் செய்யும் பொதுவான தவறு ஒப்பிடு. நீ அவனைப் போல தாடி வெச்சுக்கோ,மீசையை டிரிம் பண்ணிக்கோ என்பதுபோல் தன்னவனை இன்னொரு ஆணுடன் ஒப்பிட்டுச் சொல்லும்போது ஆணின் பக்குவத்தைப் பொறுத்து அதன் விளைவுகள் இருக் கும். அதேபோல்தான் ஆணுக்கும்.
உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது”
மேலும்ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்
மேலும்உலகம் முழுவது மிருந்து பல நாடுகளைச் சேர்ந்த
மேலும்குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்
மேலும்அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்
மேலும்