அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ் தலைமையை நாடி வந்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். விடுதிகள், பண்ணை வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து எம்எல்ஏக்களும் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை ஏற்று வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்துள்ளது. நாளுக்கு நாள் ஓபிஎஸ் பக்கம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுநாள்வரை எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் வந்தனர். தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினர்கள், லோக்சபா உறுப்பினர்கள் வந்து ஆதரவை தெரிவித்தனர். இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளார். மாஃபா பாண்டியராஜன் மிகப்பெரிய ரோஜா பூங்கொத்து கொடுத்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு தெரிவித்தார். தொண்டர்கள் மத்தியில் பேசிய மாஃபா பாண்டியராஜன், வாக்காளர்களிடம் வாக்கு கேட்க நிற்கும் போது அனைவரும் விரும்புவது ஜெயலலிதா விரும்பிய ஒற்றுமையைத்தான். அந்த ஒற்றுமை காக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நான் மட்டுமல்ல, தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களும், அனைத்து அமைச்சர்களும் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையை ஏற்று வருவார்கள் என்று கூறினார். அதிமுக என்னும் எஃகு கோட்டையில் என்றைக்கும் பிளவு ஏற்படாது என்று கூறிய அவர், கட்சியை பிளக்க வேண்டும் என்ற திமுகவின் கனவு நனவாகப் போவதில்லை என்றார். மாஃபா பாண்டியராஜனை வரவேற்று பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் நடத்தும் தர்மயுத்தத்திற்கு வலுசேர்க்க வந்து இணைந்துள்ளார் மாஃபா பாண்டியராஜன் என்று கூறினார். இது இளைஞர்களின், மாணவர்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. இன்னும் அங்கிருந்து அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்றாக இணைந்து நம் பக்கம் வருவார்கள் என்றார். இதற்கு அச்சாரம் சேர்க்கும் வகையில் உள்ளது. அம்மாவின் ஆன்மா தான் நம்மை இயக்குகிறது. மக்கள் புரட்சியை உருவாக்கியுள்ளது. அந்த புரட்சிக்கு வித்திடும் வகையில் வந்து இணைந்த அனைவரைக்கும் கோடான கோடி நன்றி என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்