சசிகலாவுக்கு எதிராக சட்டப்பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், அதுவரை சசிகலா முதல்வராக பதவியேற்பதை தள்ளி வைக்கும் வகையில் தடை விதிக்க கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்தது. இன்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது. சசிகலாவுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்