தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சூசகமாக தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக உள்ள சூழ்நிலையில், அவருக்கு எதிராக தமிழகம் முழுக்க ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் நடுவே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது பல தளங்களிலும் உள்ள பிரபலங்களையும் கூட சீண்டியுள்ளது. அதில் ஒரு எதிர்ப்பு யாரும் எதிர்பார்க்காத தளத்தில் இருந்து கூட வந்துள்ளது. அந்த பிரபலம் வேறு யாருமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் சசிகலாவுக்கு எதிரான எதிர்ப்பை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும், 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது' என்று அஸ்வின் டிவிட் செய்துள்ளார். 234 தொகுதிகள் தமிழகத்தில் இருப்பதையும், விரைவில் ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெறும், என்பதையும் அஸ்வின் பூடகமாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்