சென்னை, ஜன. 24- தமிழகத்தில் தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக வெடித்து இருப்பது மற்றும் மாநில அரசு நிலைத்தன்மையில்லாதது உள்ளிட்டு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக காரணம் காட்டி தமிழக ஆட்சியை கலைக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்பில் தமிழகத்தின் சட்ட, ஒழுங்கு குறித்து விவாதிப்பதற்கு உள்துறை அமைச்சு அவசரமாக கூடியுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி கலைக்கப்படுமானால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதலமைச்சராக நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலாவிற்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வரும் வேளையில் பல்வேறு விவகாரங்களில் சசிகலா தலையிட்டு வருவது முதலமைச்சர் என்ற முறையில் பன்னீர்செல்வம் தனது கடமையை சரிவர ஆற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதேவேளையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் இன்று எட்டாவது நாளாக எட்டியுள்ள வேளையில் லட்சக்கணக்கான மாணவர்கள் இணைந்து போராடுவது, மாணவர்களுக்கு எதிராக அடிதடி பிரயோகம், ஆங்காங்கு வாகன எரிப்பு, போலீஸ் நிலையம் எரிப்பு, போக்குவரத்து நிலைக்குத்தியிருப்பது தமிழகத்தை முடக்கியுள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடிக்குமானால் தமிழக அரசை கலைக்கும்படி மோடி அரசு பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்பில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து விவாதிப்பதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் உள்துறை அமைச்சு அதிகாரிகள் கூடியுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்