உச்சநீதிமன்ற தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிச்சயம் நடைபெறும் என எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் வெகுண்டெழுந்த காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் ஆதரவு கரம் நீட்டினர். கடந்த 15, 16-ந்தேதிகளில் தடையை மீறி அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் தடையை மீறி காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்த சூழலில் அலங்காநல்லூருக்கு வெளி மாவட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் 16-ந் தேதி திரண்டு வந்தனர். வாடிவாசல் முன்பு குவிந்த அவர்கள் அங்கு தர்ணா போராட்டத்தை தொடங்கினர். காளைகளை வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட வேண்டும். அதுவரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று அவர்கள் அறிவித்தனர். இரவிலும் போராட்டத்தை தொடர்ந்த அவர்களை மறுநாள் காலை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக போராட்டக் களம் மேலும் தீவிரம் அடைந்தது. அலங்காநல்லூர் செல்லும் சாலையில் உள்ள கேட்டுக்கடை பகுதியில் கைதானவர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என ஏராளமானோர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையில் கைதாகி திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் அலங்காநல்லூர் போராட்ட களத்திற்கே சென்றனர். கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் கடந்த 3 நாட்களாக சாலையிலேயே படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) 4-வது நாளாக அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறும்போது, வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிடும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதுவரை வீட்டிற்கு செல்ல மாட்டோம். தொடர்ந்து இங்கேயே இருப்போம். ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படாவிட்டால், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் அப்படி செய்தால் நாங்கள் போராட்டங்களை நிறுத்திக்கொள்கிறோம் என்றனர். போராட்டக்களத்தில் இருப்பவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள் உணவு வழங்கி வருகின்றன. அப்போது வெளிநாட்டு குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதனை வாங்க இளைஞர்கள் மறுத்து விட்டனர். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமே வெளிநாட்டு அமைப்பான பீட்டாதான் என தெரிவித்த இளைஞர்கள் அந்த அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. நேற்று நடிகர் இமான் அண்ணாச்சி, டைரக்டர் கவுதமன் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டையும், விவசாயத்தையும் பிரிக்க முடியாது. தமிழர் நலனுக்காக அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என டைரக்டர் கவுதமன் தெரிவித்தார். இந்த போராட்டம் காரணமாக அலங்காநல்லூருக்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 7-வது நாளாக பஸ்கள் எதுவும் அங்கு செல்லவில்லை. வாடிவாசல் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் போராட்டம் வலுத்துள்ளதால் கடந்த 3 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டே இருந்தன. இன்று 4-வது நாளாகவும் அதே நிலை நீடித்தது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்