இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட பின்னர் தலைமறைவாகியிருந்து இறுதியில் நாடு திரும்புவதற்காக புதுடில்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த 8 மலேசியர்களை இந்திய போலீசார் தடுத்து நிறுத்தினர்.
புதுடில்லியிலுள்ள நிஸாமுடின் மையத்தில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் அந்த 8 மலேசியர்களும் கலந்து கொண்டதாக புதுடில்லி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த சமய விழாவில் கலந்து கொண்ட பலருக்கு கோவிட் - 19 நச்சுயிரி நோய் தொற்றிக் கொண்டுள்ளதால் இந்திய போலீசார் அந்த சமய விழாவில் கலந்து கொண்டவர்களை வலைவீசி தேடி வந்தது.
எனினும், அந்த சமய விழாவில் கலந்து கொண்ட மேற்குறிப்பிட்ட 8 மலேசியர்களும் புதுடில்லியில் தலைமறைவாக இருந்து வந்ததாகவும் அச்செய்தியில் கூறப்பட்டது.
தடுத்து நிறுத்தப்பட்ட அந்த 8 மலேசியர்களும் மேல் விசாரணைக்காக இந்திய போலீசாரிடமும் சுகாதார இலாகாவிடமும் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
அந்த சமய விழாவில் கலந்து கொண்ட எஞ்சியவர்களை அடையாளம் காண அவர்களின் கைப்பேசிகளிலுள்ள தொலைபேசி எண்களை போலீசார் கண்டறிந்து வருகின்றனர்.
அந்த தப்ளிக் சமய விழாவில் சுமார் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட பலர் கோவிட் - 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இந்திய அரசாங்கம் கூறி வந்தாலும் அவர்கள் இன்னும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர்.
சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த அந்த தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட 960 வெளிநாட்டவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ள வேளையில், அவர்களின் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உள்துறை அமைச்சு கூறியது.
அதிகமான வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசாவை தவறாகப் பயன்படுத்தி சமய விழாவில் கலந்து கொண்டு வருவதாக இந்திய அமலாக்கப் பிரிவினர் கூறினர்.
இந்திய விசாவை தவறாகப் பயன்படுத்தியதற்காக அந்நிய நாட்டவர்கள் சட்டத்தின் 14ஆவது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.
இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட
மேலும்பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி
மேலும்தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்
மேலும்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மேலும்