பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி டில்லி ராம்லீலா மைதானத்தில் பேச இருக்கும் பிரதமர் மோடியைக் குறிவைத்துள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
டில்லியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி நாளை 22ஆம் தேதி டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரச்சாரம் நடத்தவுள்ளார். இதில், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவர்கள் கலந்து கொள்வார்கள் என பாஜ. அறிவித்திருந்தது. இந்த கூட்டத்தில் பாஜ. கூட்டணி முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் மோடியை பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் பிரதமரின் பாதுகாப்பிற்காக நீலப் புத்தகத்தில் உள்ள வழிமுறைகளை முழுமையாகச் செயல்படுத்துமாறு, சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் டில்லி போலீசாருக்கு உளவுத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டன.
இது குறித்து உளவுத்துறை சார்பில் கூறப்படுவதாவது: மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பெரிய கூட்டமும் அதிகமான ஊடகங்களும் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பான ஜெஷ்-இ-முகமது செயற்பாட்டாளர்கள், அணி திரட்டப்பட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம், அயோத்தி தீர்ப்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செயப்பட்டது என்பன போன்ற, மோடியின் நடவடிக்கையால் இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்