இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. பேட்டிங்கில் மிரட்டிய ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் சதம் அடித்து மிரட்ட, வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் வீணானது.
இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் போலார்டு, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஷிவம் துபே நீக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. துவக்கத்தில் இருந்தே வேகம் காட்டிய ராகுல் சிக்சர்களாக விளாசினார். ரோகித், 67 வது பந்தில் அரைசதம் அடித்தார். பின் வேகத்தை அதிகரித்த இவர், 107ஆவது பந்தில் சதம் விளாசினார். இது ஒருநாள் அரங்கில் 28 வது சதம்.
இவருக்கு கைகொடுத்த ராகுல், ஒருநாள் அரங்கில் 3ஆவது சதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்த போது, ராகுல் (102) அவுட்டானார். கேப்டன் கோஹ்லி, முதல் பந்தில் டக் அவுட்டானார். ஹோல்டர் பந்தில் சிக்சர் அடித்த ரோகித், 159 ரன்னுக்கு அவுட்டானார். ஸ்ரேயாஸ் அரைசதம் ரிஷாப் 16 பந்தில் 39 ரன் எடுக்க, ஸ்ரேயாஸ் (53) ஒருநாள் அரங்கில் தொடர்ந்து 5வது அரைசதம் எட்டினார்.
இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 387 ரன்கள் குவித்தது. கேதர் ஜாதவ் (16), ஜடேஜா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் 280 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 107 ரன்னில் இமாலய வெற்றி பெற்றது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்