நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அன்புமணியும் தருமபுரி தொகுதியில் தோல்வியை தழுவினார்.
இதனால் பாமக பெரும் பின்னடைவை சந்தித்தது. மேலும் பா.ம.க.வின் சார்பு அமைப்பான தமிழ்ப் படைப்பாளர் பேரவையின் சார்பில் சென்னையில் கடந்த 22-ந் தேதி நடத்தப்பட்ட வெறுப்பு அரசியலுக்கு எதிரான கருத்தரங்கத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், ஆங்கிலப் பத்திரிகை நிருபர் ஒருவர் தன்னிடம், "நீங்கள் மரம் வெட்டினீர்களா' என்று கேட்டார் எனச் சொல்லிவிட்டு, அந்த நிருபரை அவன் இவன் என்று ஒருமையில் விளித்ததோடு, மிக மோசமான வசவு வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்தார். "இனி வெட்டியது பற்றி கேள்வி எழுப்புகிறவனை வெட்டுவோம்' னும் டாக்டர் கொந்தளிச்சாருனு சொல்லப்படுகிறது.
சமீபத்திய தேர்தலில் பா.ம.க. சந்தித்த அதிர்ச்சித் தோல்வியாலும், தன்னுடைய வயது முதிர்ச்சியின் அடிப்படையிலும் டாக்டர் வெளிப்படுத்திய ஒருமை யிலான வார்த்தைகள் ஊடகத்துறையினரை கொந்தளிக்க வைத்துள்ளது. வெறுப்பு அரசியலுக்கு எதிரான கருத்தரங்கத்தில் இத்தனை வெறுப்போடு ஊடகத்துறையினரை டாக்டர் பேசியதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்