செவ்வாய் 20, ஏப்ரல் 2021  
img
img

கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தேவையா?
புதன் 26 ஜூன் 2019 12:54:41

img

மதுரை விமான நிலையத்தில் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், என் நிலைப்பாடு தற்போது அமைதியாக இருப்பதுதான். சந்தித்துப் பேசியவர்களை வெளியே சொன்னது, ஆடியோ, வீடியோ வெளி யிடுவது ஒரு தலைமைக்கான நல்ல பண்பாடு அல்ல. ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்ததை வெளியே சொல்வது, விஜயபாஸ்கரை பார்த்ததாக வெளியே சொல்வது இதெல்லாம் ஒரு தலைமைக்கான நல்ல பண்பாடு அல்ல.

அமமுகவில் நிர்வாகம் சரியில்லை. ஒரே ஒரு தோல்வியாக இருந்தாலும் மிகப்பெரிய தோல்வி. பாராளுமன்றத்தில் தோல்வி, 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் தோல்வி என்றாலும், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் கவனம் செலுத்தி வேலை பார்த்தும் தோல்வி ஏற்பட்டு ள்ளது. அப்படியென்றால் மக்கள் ரசிக்கவில்லை என்றுதானே அர்த்தம். 

மனக்கசப்பு ஏற்படுவது இயற்கை. மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதா? இல்லை.

அதிமுகவுடன் இணைவதற்கான முடிவு உள்ளதா? அந்த முடிவே எடுக்கவில்லை. அந்தக் கட்சியுடன் பேசுகிறார். இந்தக் கட்சியுடன் பேசுகிறார் என்று இவர்களாகவே பரப்பி விடுகின்றனர். 

என்னை பார்த்தால் பொட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் என்று உங்களை சொல்லியிருக்கிறார் தினகரன்...அவர் ஒரு கட்சித் தலைவர். ஒரு பண்பாடு இல்லாமல் பேசுகிறார். பொட்டிப்பாம்பாக அடங்குவார் என்றால், நாங்கள் என்ன சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்தோமா? அடங்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி ஒரு தலைவர் பேசலாமா? இவரது பேச்சை மக்கள் ரசிக்கவில்லை.  

தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்தை ஏற்க மாட்டாரா? யாருடைய கருத்தையும் ஏற்க மாட்டார்.

நீங்கள் கொள்கைப்பரப்புச்செயலாளர்...கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தேவையா? இவ்வாறு கூறினார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img