img
img

ஜல்லிக்கட்டு... கிரண் பேடி பேச்சுக்கு ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த
வியாழன் 12 ஜனவரி 2017 15:06:44

img

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் கருப்பு பொங்கலாகவே அனுசரித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு நடத்த அனுமதி கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பேரணிகளும் நடைபெற்றன. இந்நிலையில், இந்தியா டுடே நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கில் ஜல்லிக்கட்டு பற்றிய விவாதம் நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு, சுஹாசினி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பங்கேற்று பேசினர். கிரண்பேடி அப்போது கருத்து தெரிவித்த கிரண்பேடி, நான் ஜல்லிக்கட்டை தொலைக்காட்சியில்தான் பார்த்துள்ளேன். துள்ளி ஓடும் மாடுகளை, வாலிபர்கள் துன்புறுத்துவதை பார்த்தேன். காளைகளை அடக்குகிறேன் என்று கூறி மாட்டின் வாலை அவர்கள் பிடித்து இழுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே ஜல்லிக்கட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது சரியான ஒன்றுதான் என்றார். தடை சரியே காளைகளை அடக்கும்போது காளைகளுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறிய கிரண்பேடி, தமிழர்களின் கலாச்சாரமாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்றார். மேலும் அவர், ஜல்லிக்கட்டு சட்டப்படி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். யானை சந்தோஷமாவா இருக்கு! கிரண்பேடியின் பேச்சுக்கு பதிலளித்த ஆர்.ஜே.பாலாஜி, கேராளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் யானை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன் காலில் சங்கிலி போட்டு கட்டி வைத்துள்ளனர். யானைகள் சந்தோஷமாகவா அங்கே நிற்கின்றன?. என்று கேட்டார். ஒட்டகம் பாவம் இல்லையா! அதேபோல், டெல்லிக்கு மிக அருகில் உள்ள குஜராத்தில், ஆயிரக்கணக்கான சுமைகளை ஒட்டகத்தின் மீது ஏற்றுக்கிறார்கள். அது ஏன் தடை செய்யப்படவில்லை. ஏன் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டின் மீது மட்டும் கை வைக்கிறீர்கள்? என்றார். தவறான தீர்ப்பு நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால், ஜல்லிக்கட்டு மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என நான் கருதுகிறேன். அப்படி பார்த்தால், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்தான் தீர்ப்பளித்தது. ஆனால், கர்நாடக மாநிலம் அதை ஏற்கவில்லை. எந்த நீதிமன்றமும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே என்று கிரண்பேடியை கேட்டார். பாலாஜிக்கு செம அப்ளாஸ்! அப்போது அரங்கில் இருந்த பலரும் ஆர்.ஜே. பாலாஜி பேசியதை கை தட்டி வரவேற்றனர். இந்தியா டுடே கருத்தரங்கில் நடைபெற்ற இந்த விவாதம் தற்போது வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டிற்கு ஆதவாக ஆர்.ஜே. பாலாஜி பேசியதை பாராட்டி பலரும் சமூக வலைத்தளங்கல்ளில், அந்த வீடியோவை பதிவு செய்து வருகின்றனர். ஒட்டுமொத்த தமிழர்களின் குரல் இது என்று கூறி வருகின்றனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img