வியாழன் 20, பிப்ரவரி 2020  
img
img

அதிமுகவின் முடிவால் பாமக கோபம்!
புதன் 19 ஜூன் 2019 16:55:23

img

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தமிழகத்தில் ஒரு இடத்தை மற்றும் கைப்பற்றியது. திமுக கூட்டணி தமிழகத்தில் 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து கூட்டணி வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். இதில் பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் தங்களது மாநில அந்தஸ்த்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் தோல்வியை தழுவினார். 

இந்த நிலையில் அதிமுகவில் சீனியர்கள் ராஜ்யசபா சீட் கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.  அதிமுகவில் உள்ள ராஜ்யசபா எம்.பி இடங்களுக்காக கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தன் அண்ணனுக்காக அமைச்சர் சண்முகம், அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன், கோகுல இந்திரா, ரபி பெர்னார்ட் என்று பலரும் அதிமுகவின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இதனால் எடப்பாடி கட்சியினரை எப்படி சமா ளிப்பது என்று ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில் பாமகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கினால் அது கட்சிக்குள் மேலும் குழப்பத்தை உருவாக்கும் என்றே எடப்பாடி கருதுகிறாராம். இதனால் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தனக்கு எம்.பி. பதவி கேட்டு பாஜக தலைவர் அமித் ஷா மூலமாக தீவிர முயற்சி செய்து வருகிறாராம். 

 

அதிமுக தரப்பிலும் தங்களுக்கு சாதகமான சூழல் இல்லாததால் ராமதாஸ் கோபத்தில் இருக்கிறார். மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை பிரச்னையால் உட்கட்சி பூசல் அதிமாகி இருப்பதால் கட்சியினரை சமாளிக்க சீனியர்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலாம் என்று அதிமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் ராஜ்யசபா சீட்டின் முடிவால் பாமக தலைமை கோபத்தில் இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
img
தமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்!

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img