கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாட்களுக்கு நடை பெறும் இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியும் நேற்று கிர்கிஸ்தான் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, "கல்வியும், கலாச்சாரமும் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும். நாம் இளைஞர்களிடத்தில் தீவிரவாத சிந்தனை பரவாமல் தடுக்க வேண்டும். தீவி ரவாதத்தை ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். இலங்கை பயணத்தின் போது அங்கு தீவிரவாதத்தின் கோர முகத்தை நன் கண்டேன். இதனை வருங்காலங்களில் தடுக்க பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி, ஊக்கம் அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்" என கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்