நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. இந்நிலை யில் இந்த மக்களவை தேர்தலில் பாஜக நடத்திய மிகப்பெரிய ஆச்சரியம் என்றால் அது மேற்கு வங்கத்தில் மம்தாவின் கட்சிக்கு போட்டியாக வாக்கு சத வீதத்தை பெற்றதுதான்.
கடந்த 2014-ம் ஆண்டு 34 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திரிணாமூல் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் 22 இடங்களை மட்டுமே பிடித்தது. இதற்கு முக்கிய காரணம் அங்கு பாஜகவின் வளர்ச்சி. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க பாஜக இப்போதே தனது திட்டங்களை தீட்ட தொடங்கியுள்ளது.
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 250 தொகுதிகளை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி வேலைவாய்ப்பு அதிகரிப்பு, தொழிற்துறைக்கு முன்னுரிமை, குடியுரிமை மசோதா போன்றவற்றை இளைஞர்கள் மத்தியில் முக்கிய பிரச்சார பொருளாக வைக்கவும் முடிவு செய்ய ப்பட்டுள்ளது. மேலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வரும் தலைவர்களில், மக்கள் மத்தியில் நல்ல பெயர் மற்றும் திறமையுள்ளவர்களை மட்டுமே பாஜகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்