நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதோடு காணாது வாக்கு வங்கியையும் இழந்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலை யில் அதிமுகவில் யாருக்கும் மத்திய அமைச்சரவையில் பாஜக தலைமை இடம் அளிக்கவில்லை.இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் இதற்கு எடப்பாடியின் உட்கட்சி அரசியலால் தான் கிடைக்கவில்லை என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களிடம் தெரிவித்ததாக செய்திகள் பரவியது.
மேலும் சமீபத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ மற்றும் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் அதிமுகவிற்கு இரண்டு தலைமை இருக்க கூடாது ஒற்றை தலைமையில் தான் அதிமுக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் கட்சி பலம் பெரும் இல்லையென்றால் உட்கட்சி பூசல் அதிகமாகும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதனால் கட்சியில் யாரிடம் அதிகாரம் உள்ளது என்று அனைவருக்கும் குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று பரப ரப்பாக பேட்டி அளித்தனர்.இந்த நிலையில் கட்சியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனது அதிகாரத்தை அதிகரிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தேர்தலுக்கு பின்பு பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையில் பாஜக இருப்பதாக அறிந்த எடப்பாடி கட்சியில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்த முடிவு செய்து ள்ளதாக தெரிகிறது.இதனால் பன்னீர்செல்வத்தின் அதிகாரத்தை குறைத்து அவருக்கு கட்சியின் அவைத்தலைவர் பதவி தரப்படலாம் என்றும் சொல்லப்ப டுகிறது. மேலும் சில முக்கிய முடிவுகளை மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்