திருச்சி, ஜன.11- அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செயப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் சமீபத்தில் பார்வையிட்டனர். அப்போது, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ’மாவட்டத்தில் வறட்சியால் விவசாயிகள் இறந்ததாக தகவல் இல்லை’ என்றார். இது, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மதியம் அவரது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில், விவசாய சங்க கொடியுடன் வந்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ. அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து, அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். கோட்டை போலீசார் பேச்சு நடத்தினர். அமைச்சரும், மொபைல் போனில் சின்னதுரையிடம் பேசினார். ஆயினும், சமாதானம் ஏற்படவில்லை. இதையடுத்து ஒரு பெண் உட்பட 15 பேரை போலீசார் கைது செதனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்